உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ஜன.,22 முதல் 25ம் தேதி வரை வானில் அணிவகுக்கும் 6 கோள்கள்!

பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ஜன.,22 முதல் 25ம் தேதி வரை வானில் அணிவகுக்கும் 6 கோள்கள்!

புதுடில்லி: ஜன.,22ம் தேதி முதல் 25ம் தேதி வரை வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் நிகழ்வை பொதுமக்கள் பார்வையிட பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.கோள்கள் வானில் ஒரே வரிசையில் தோன்றுவது சிறப்பு இல்லை என்றாலும், அவற்றில் பலவற்றை ஒரே நேரத்தில் பார்ப்பது அரிது. அத்தகைய ஒரு அரிய நிகழ்வு நடக்க உள்ளது. ஜன.,22ம் தேதி முதல் 25ம் தேதி வரை வானியல் ஆர்வலர்களை மகிழ்விக்கும் வகையில், ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்க உள்ளன. வெறும் கண்களால் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றை பார்க்க முடியும். ஆனால் நெப்டியூன் மற்றும் யுரேனஸை சக்திவாய்ந்த தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். ஜன. 22ம் தேதி முதல் ஜன., 25ம் தேதி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை கோட்டுபுரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், பொதுமக்கள் பார்வையிட தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஏற்பாடு செய்துள்ளது. கோவையில் மண்டல அறிவியல் மையத்திலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இது குறித்து, வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: பொதுமக்களுக்கான சிறப்பு இரவு வான கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கிரகங்களை உங்கள் மொட்டை மாடியில் இருந்தோ அல்லது கடற்கரையில் இருந்தோ பார்க்கலாம். செவ்வாய் கிரகம் இரவு 9 மணியளவில் உதயமாகும். இந்தக் கிரகங்கள் அனைத்தையும் தனித்தனியாகப் பார்க்கலாம். கோள்கள் ஒன்றுக்கொன்று மில்லியன் கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றை ஒரு பெரிய தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும் என்றாலும், நட்சத்திரங்களுக்கு மத்தியில் அவற்றைக் கண்டறிய நிபுணத்துவம் தேவை. இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடக்காது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.கோவை கொடிசியா ரோட்டிலுள்ள அறிவியல் தொழில்நுட்ப மண்டல அறிவியல் மையத்தில் கோள்களின் அணிவகுப்பை ஜன., 22ம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8.00 மணி வரை கண்டு ரசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sankare Eswar
ஜன 21, 2025 12:50

ராமசாமி எடுத்துவிட்டு தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் என்று வைத்தால் சிறப்பாக இருக்கும்


Bala
ஜன 21, 2025 16:16

சரியான கருத்து. நானும் அதைத்தான் நினைத்தேன் . பெரியாருக்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் ? பெரியார் சமூகங்களிடையே வெறுப்பை விதைத்தவர். தேசப்பற்றும் இல்லாத ஒரு அந்நிய கைக்கூலி . தமிழ் மொழியையும் , தமிழர்களை சிறுமைப்படுத்தியவர். சென்னை ராஜதானியை வெள்ளைக்காரன்தான் ஆளவேண்டும், தமிழர்களுக்கு ஒரு குண்டு ஊசி கூட செய்யத்தெரியாது என்றெல்லாம் நம் மக்களை இழிவுபடுத்தியவர். தொழில்நுட்பத்திற்கும் அறிவியலுக்கும் அவர் எதிரி. மஹாகவி பாரதியின் பெயர்தான் சரியாக இருக்கும். அவர்தான் சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்று ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்பே கவிதையால் அறிவியல் கருத்துக்களை கூறியவர். இல்லாவிட்டால் விஞ்ஞானி , முன்னாள் அறிவியல் ஆலோசகர், குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் பெயரை அனைத்து அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கூடங்களுக்கு வைப்பதே சால பொருத்தம் .


Padmasridharan
ஜன 21, 2025 11:07

கவனிக்கவும் ?? சென்னையில் "கோட்டுபுரத்தில்".. இப்படி ஒரு இடமில்லை. இது "கோட்"டூர்"புரம்"


Senthoora
ஜன 21, 2025 10:53

இராவணன், இராணியாசூரன் ஆகியோருக்கு பிள்ளைகள் பிறக்கும்போது. எல்லாம் கிரகங்களும் அணிவகுது நின்னதாம். விளைவு அழிவு அவர்களுக்கு. இப்போ 6 கிரங்கள் தான் அழிவு 65% ஆகுமா?


KavikumarRam
ஜன 21, 2025 10:32

டிரம்ப் வேற பதவியேத்திருக்காரு. கோள்கள் வேற இப்படி வரிசை கட்டி நிக்குது. என்னாகப்போகுதோ???


raja
ஜன 21, 2025 13:32

திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட கட்டுஸ் குடும்பம் அழிந்தால் தமிழன் மிக சந்தோசம் அடைவான்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை