உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.1.50 லட்சம் சம்பளம் வேணாம்.... வேலையை உதறித்தள்ளி விட்டு இளம்பெண் செய்த காரியம்; குவியும் பாராட்டு

ரூ.1.50 லட்சம் சம்பளம் வேணாம்.... வேலையை உதறித்தள்ளி விட்டு இளம்பெண் செய்த காரியம்; குவியும் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரூ: மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம் பெறும் உதறித் தள்ளி விட்டு, தனக்கு பிடித்த பேக்கரி தொழிலை தொடங்கிய பெண்ணின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.பெங்களூரூவைச் சேர்ந்த ஆஸ்மிதா என்பவர் தனியார் நிறுவனத்தில் ஹெச்.ஆர்., (HR)ஆக பணியாற்றி வந்தார். ஆனால், அவருக்கு கேக், க்ரீம் உள்ளிட்டவை அடங்கிய பேக்ஸ் தொழிலில் தான் அதிக ஆர்வம் இருந்துள்ளது. எனவே, இது தொடர்பாக தனது கணவர் சாகரிடம் கூறியுள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்கவே, உடனே தான் மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஹெச்.ஆர்., வேலையை ராஜினாமா செய்தார். பிறகு, தனக்கு பிடித்த பேக்ஸ் தொழிலில் மனநிறைவுடன் ஈடுபாடு காட்டி வருகிறார். ஆஸ்மிதா செய்த ஒரு தயாரிப்பின் போட்டோவை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த சாகர், 'மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளம் பெறும் வேலையில் இருந்து விலகிய என்னுடைய மனைவி இதனை செய்து முடித்துள்ளார். கடவுளுக்கு நன்றி,' எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவுக்கு பதில் அளித்து வரும் நெட்டிசன்கள், ' ஆஸ்மிதாவின் இந்த முடிவை வரவேற்கிறோம். நிச்சயம் அவர் ஒருநாள் வெற்றி பெறுவார்,' எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sivaprakasam Chinnayan
ஜன 30, 2025 11:17

Yes. Yes. Day by day the Dollar is growing. Rupee value is declines. Gold Rate is growing to sky . Tomato 6 kgs for 100 rupees. Farmers are dying day by day. Good efforts by Modiji. Keep it up


நிக்கோல்தாம்சன்
பிப் 04, 2025 03:33

விவசாயியாக நான் மன்மோகன்சிங் காலத்தில் இருந்து வாழ்ந்துவருகிறேன் , இரண்டு ஆளுமைகளில் எது சிறந்தது என்று எனக்கு நன்கு தெரியும் , உங்களை போன்ற பேக் விவசாயி தான் குறை காண்பர்


நிக்கோல்தாம்சன்
ஜன 30, 2025 05:11

நானும் எனது கணவரும் எங்களது ஐடி பணியினை உதறி இன்று விவசாயத்தை சார்ந்து வாழ்ந்து கொண்டுள்ளோம் , எங்களது கலப்பு மணமும் , தோள்நிறங்களும் பலவேறு தாழ்வு மனப்பான்மையை கொண்டுவந்தாலும் எனது காதல் கணவர் இப்போ அவருக்கு 51 வயது என் பின்னால் துணை நிற்கிறார் என்றால் அதற்க்கு எண்களின் மணபொருத்தமும் காரணம் , அது போல சாகர் நிற்பது மகிழ்வை தருகிறது , வாழ்த்துக்கள் அஸ்மிதா


Venkatesan.v
ஜன 30, 2025 00:33

பேக்கரி , டீ கடை, இட்லி கடை.... இதெல்லாம் ஐடி மற்றும் எச் ஆர் வேலைய விட நிம்மதி.


தாமரை மலர்கிறது
ஜன 30, 2025 00:24

லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தால் கூட, வேண்டாம் என்கிறார்கள். இன்றைய திறமையான இளைஞர்களுக்கு பொருளாதார வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சியை வெளிப்படுகிறது.


Balaji
ஜன 29, 2025 22:59

கணவன் மனைவி இருவரில் ஒருவர் சம்பாத்தியம் இருக்கும்போது மற்றொருவர் தன் கனவினை நனவாக்க முயல்வது அனைவரும் செய்யவேண்டிய ஒன்று.. இதை சாதனையாக கருதுவது எதற்கு என்று எனக்கு விளங்கவில்லை..


visu
ஜன 30, 2025 08:13

தன்வேலையை செய்த காவலருக்கு விருது வழங்குவதில்லையா ? தவிர இது அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட விஷயம்


புதிய வீடியோ