வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இது நமக்கே கேடாய் முடியும்.
கேடி சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு செக் வைக்க இதை பயன்படுத்தலாம்.
சப்ப மூக்குக்கு ஆப்பு அடிக்கதான்
புதுடில்லி: டி.ஆர்.டி.ஓ., மற்றும் இந்திய கடற்படை இணைந்து தரை மற்றும் கடல் பகுதியில் பயன்படுத்தக்கூடிய கண்ணி வெடியை வெற்றிகரமாக சோதனை செய்தது.பஹல்காம் சம்பவத்தில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு இந்தியா, பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக,பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய கடற்படை இணைந்து உருவாக்கிய கண்ணி வெடியின் யுத்த சூழல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eoewto3x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட எம்.ஐ.ஜி.எம்., எனப்படும் இந்த கண்ணிவெடியின் சோதனைவெற்றிகரமாக செய்ததாக பாதுகாப்பு அமைச்சக அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.வெற்றிகரமான சோதனை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, நவீன கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக இந்திய கடற்படையின் திறன்களை மேம்படுத்த எம்.ஐ.ஜி.எம். வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டி.ஆர்.டி.ஓ., இந்திய கடற்படை மற்றும் தொழில்துறையைப் பாராட்டியுள்ளார். இந்த அமைப்பு இந்திய கடற்படையின் கடலுக்கடியில் போர் திறன்களை மேலும் மேம்படுத்தும்.இவ்வாறு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது நமக்கே கேடாய் முடியும்.
கேடி சீன நீர்மூழ்கி கப்பல்களுக்கு செக் வைக்க இதை பயன்படுத்தலாம்.
சப்ப மூக்குக்கு ஆப்பு அடிக்கதான்