வாசகர்கள் கருத்துகள் ( 2 )
I am a BE final year student am I elegible to apply
DRDO வில் Apprentice பயிற்சிக்கு பிறகு வேலைக்கு உத்திரவாதம் உண்டா ? தெரிந்தவர்கள் சொல்லவும்
புதுடில்லி: மத்திய அரசின் டி.ஆர்.டி.ஓ., சோதனை தளத்தில் அப்ரென்டிஸ் ஆக பணியாற்ற 54 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defense Research and Development Organisation (டி. ஆர். டி. ஓ.,) இந்திய ராணுவத்துக்கு தேவையான ஏவுகணைகள், பல்வேறு சாதனங்களை உருவாக்கி வருகிறது. இதன் ஒருங்கிணைந்த சோதனை தளம் ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் அமைந்துள்ளது. இங்கு அப்ரென்டிஸ் பணியில் சேருவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டதாரிகள் மொத்தம் 30 பேரும், டிப்ளமோ படித்தவர்கள் 24 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 7.பட்டதாரி அப்ரென்டிஸ் (Graduate Apprentice)- 30டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரென்டிஸ் (Technician (Diploma) Apprentice)- 24கல்வித் தகுதி என்ன?
* பட்டதாரி அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்தில் பி.இ., பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். * டெக்னீசியன் (டிப்ளமோ) அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.பதவி காலம்
விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 1 ஆண்டு பதவியில் இருப்பார்கள். விண்ணப்பிப்பது எப்படி?
https://www.drdo.gov.in/drdo/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 20.தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
I am a BE final year student am I elegible to apply
DRDO வில் Apprentice பயிற்சிக்கு பிறகு வேலைக்கு உத்திரவாதம் உண்டா ? தெரிந்தவர்கள் சொல்லவும்