உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவி முன் தகாத செயலில் ஈடுபட்ட டிரைவர் கைது

மாணவி முன் தகாத செயலில் ஈடுபட்ட டிரைவர் கைது

அசோக் விஹார்: கல்லுாரி மாணவி முன்னிலையில் தகாத செயலில் ஈடுபட்ட கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். திங்கட்கிழமை காலையில் தன் கல்லுாரிக்குச் செல்வதற்காக 22 வயது மாணவி ஒருவர், 'ரேப்பிடோ' செயலி மூலம் 'கேப் புக்' செய்தார். கார் வந்தது. அதில் ஏறிய மாணவியிடம், முன் இருக்கையில் அமரும்படி ஓட்டுநர் கேட்டுக் கொண்டார். மறுத்த மாணவி, பின் இருக்கையிலேயே அமர்ந்தார். காரை ஓட்டிக் கொண்டே ஓட்டுநர் தகாத செயலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, கிராந்தி சவுக் பகுதியில் போலீசார் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும், காரை நிறுத்தும்படி கூச்சலிட்டார். ஓட்டுநர் காரை நிறுத்தியதும், கீழே இறங்கிய மாணவி, ஓடிச்சென்று நடந்ததை போலீசாரிடம் கூறினார். அதற்குள் கேப் ஓட்டுநர் தப்பிவிட்டார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, லோம் சங்கர், 48, என்பவரை கைது செய்தனர். நீதிபதி முன்னிலையில் மாணவியிடம் வாக்குமூலம் பெறப்படும் என, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சமீபத்தில் தான் மாணவி, பெங்களூரில் இருந்து முதுகலை படிப்புக்காக டில்லியில் குடிபெயர்ந்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை