உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ட்ரோன் மூலம் வெடி பொருட்கள் வீச்சு: பாகிஸ்தான் சதியா என விசாரணை

 ட்ரோன் மூலம் வெடி பொருட்கள் வீச்சு: பாகிஸ்தான் சதியா என விசாரணை

பூஞ்ச்: ஜம்மு - காஷ்மீரில் எல்லையை ஒட்டிய பகுதிகளில், பாகிஸ்தானில் இருந்து, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக போதை பொருட்கள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை வீசப்பட்டதை அடுத்து, எல்லை பகுதிகளில் தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்திஉள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள், ஜம்மு - காஷ்மீர் எல்லை வழியாக சட்டவிரோதமாக ஊடுருவுவதை வழக்கமாக வைத்துள்ளதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, காதி கர்மடா பகுதியில் நேற்று முன்தினம் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் ஒன்று பறந்ததை, பாதுகாப்பு படையினர் கண்டனர். பாகிஸ்தானில் இருந்து வந்து, நம் எல்லையில் ஐந்து நிமிடங்கள் பறந்த ட்ரோன், ஒரு பார்சலை வீசிவிட்டு, பின் மீண்டும் அந்நாட்டின் எல்லைக்கு சென்றது. இதையடுத்து, காதி கர்மடா பகுதியில் உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், எல்லைக் கட்டுப் பாட்டு அருகே பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதில், சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய சாதனம், போதை பொருட்கள், வெடிமருந்து கள் இருந்ததை அடுத்து, அவை சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் முழுதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லையோர கிராமங்கள், அடர்ந்த வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுஉள்ளனர். கதுவா, சம்பா, ஜம்மு மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் உள்ள பதான்கோட்- - ஜம்மு - -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், வாகன தணிக்கையிலும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் தோடா - கிஷ்துவார் வனப்பகுதிகளில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங் கரவாத அமைப்பைச் சேர்ந்த இரு கும்பல் கைது செய்யப்பட்ட நிலையில், எல்லையில் வெடிமருந்துகள் வீசப்பட்டு உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்குமோ என சந்தேகிக்கும் பாதுகாப்பு படையினர், அந்த அமைப்பின் ஆதரவாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை