உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதோ வந்தாச்சு பஞ்சாயத்து! அதிஷி ஒரு டம்மி சி.எம்.! எகிறிய ஆம் ஆத்மி எம்.பி.

இதோ வந்தாச்சு பஞ்சாயத்து! அதிஷி ஒரு டம்மி சி.எம்.! எகிறிய ஆம் ஆத்மி எம்.பி.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; அதிஷி ஒரு டம்மி முதல்வர் என்று ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சுவாதி மாலிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராஜினாமா

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மாட்டிய கெஜ்ரிவால் ஒருவழியாக ஜாமினில் வெளி வந்துள்ளார். அவருக்கு கடும் நிபந்தனைகளை கோர்ட் விதித்துள்ள நிலையில் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

முதல்வர் அதிஷி

அவருக்கு பின் டில்லி முதல்வராக யார் பொறுப்பேற்பார் என்ற கேள்வி எழுந்தது. கட்சி எம்.எல்.ஏக்களுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் முறைப்படி அதிஷி மர்லேனா புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார். இவர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் ஒரே பெண் அமைச்சராக இருந்தவர்.

எதிர்ப்புக்குரல்

கட்சியின் ஒருமனது முடிவு என்று அறிவிக்கப்பட்டாலும் ஆம் ஆத்மிக்கு உள்ளே இருந்து எதிர்ப்புக்குரலும் எழுந்துள்ளது. இந்த குரலை எழுப்பி இருப்பவர் ராஜ்ய சபா எம்.பி., சுவாதி மாலிவால். இது குறித்து தமது எக்ஸ் வலை தளத்தில் அவர் கூறி இருப்பதாவது;

சோகமான நாள்

டில்லிக்கு இன்று சோகமான நாள். தீவிரவாதி அப்சல் குருவை தூக்கிலிடாமல் காப்பாற்றுவதற்காக அதிஷி குடும்பத்தினர் போராடினர். அதில் இருந்து வந்தவர் அதிஷி. அவர் தான் இப்போது முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

டம்மி முதல்வர்

அப்சல் குரு நிரபராதி, சதி செய்து அவர் சிக்க வைக்கப்பட்டார் என்று அவரை காப்பாற்ற அதிஷி பெற்றோர் ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பியவர்கள். அதிஷி ஒரு டம்மி முதல்வர். இருந்தாலும், இந்த விஷயம் ஒரு நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. கடவுள் டில்லியை காக்கட்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Sathyanarayanan Sathyasekaren
செப் 17, 2024 19:43

இவரை போன்ற பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு வோட்டை போடும் அளவிற்கு டெல்லி மக்கள் தமிழர்களை போல அறிவாளிகள்.


தாமரை மலர்கிறது
செப் 17, 2024 19:20

மிக சரியாக சொல்லி உள்ளார்.


GMM
செப் 17, 2024 17:49

கெஜ்ரிவால் கூட ஒரு டம்மி முதல்வர் தான் . இவர் வெற்றிக்கு பிச்சை போட்ட வந்தேரிகள் தான் உண்மையான நிழல் அதிகாரவர்க்கம் . ? ஆம் ஆத்மி ஒரு டம்மி கட்சி. இது போல் மம்தா , திராவிட கட்சிகள் ? காங்கிரஸ் சற்று பரவாயில்லை.


konanki
செப் 17, 2024 16:46

டெல்லி மக்களின் உயிர் உடமை க்கு இனி ஆபத்து??


konanki
செப் 17, 2024 16:45

கெஜ்ரிவால் போன்ற தலைவர்கள் இந்தியாவின் சாபக்கேடு


konanki
செப் 17, 2024 16:44

அஃப்ஸல் காரு விடம் மிகுந்த பாசத்துடன் இருந்தது போல் மற்ற தேசத் துரோகி களிடம் பாசம் காட்டி டெல்லி மக்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும்???


duruvasar
செப் 17, 2024 15:44

கெஜ்ரிவாலும் இதே இனத்தை சார்ந்தவர் தான். குருவைப் போல் சிஷ்யை அவ்வளவுதான்.


kulandai kannan
செப் 17, 2024 15:33

குடும்ப உறுப்பினரை முதல்வராக்காமல், கட்சி உறுப்பினரை முதல்வராக்கியதற்கு கேஜ்ரிவாலுக்கு பாராட்டுக்கள்.


Nagendran,Erode
செப் 17, 2024 16:21

அதிஷி கெஜ்ரிவாலுடைய குடும்பம் இல்லைன்னு உனக்கு தெரியுமா? நல்லா தெரிஞ்சுகிட்டு கருத்தை போடு...


Ganapathy
செப் 17, 2024 19:44

எருமசாணில முக்குன பிஞ்ச செருப்பால உன்னய


Palanisamy Sekar
செப் 17, 2024 15:31

டெல்லியில் விவசாயிகள் போர்வையில் போராடியதுகூட இவருடைய பங்கு மிக அதிகம் என்று அப்போதே பரவலாக பேசப்பட்டது. இனி பங்களாதேஷ் முஸ்லிம்கள் டெல்லியில் குவிந்துவருவார்கள். அம்மணி மீது மத்திய புலனாய்வு ஒருகண் வைத்திருப்பது நாட்டுக்கு நல்லது. குடும்பத்தில் குழப்பம் என்கிற டெல்லி செய்தியை இன்னும் விவரமாக நாறும் அளவுக்கு இந்த அம்மணியின் தேர்வு பற்றி வெளிவரும் செய்தியை கேட்பீர்கள். கெஜ்ரிவால் மோசமான நபர். பொறுத்திருந்து பாருங்கள்


Nagarajan D
செப் 17, 2024 15:22

இனிமேல் தான் இருக்கு கெஜ்ரிவாலுக்கு பஞ்சாயத்து....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை