மேலும் செய்திகள்
குலசை தசரா விழாவில் ஜாதி கொடி ஏந்தி வர தடை
14-Sep-2024
மைசூரு: மைசூரு தசரா விழாவை ஒட்டி மாநில அளவிலான தசரா விளையாட்டு போட்டிகள் அக்., 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை ஒட்டி, சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. விவசாய தசரா, மகளிர் தசரா, இளைஞர் தசரா, உணவு திருவிழா, பொருட்காட்சி, விளையாட்டு போட்டிகள், மல்யுத்தம், நீர் விளையாட்டு என பல நிகழ்ச்சிகள் நடக்கும்.இதன் ஒரு பகுதியாக, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், அக்டோபர் 3 முதல் 6ம் தேதி வரை, மைசூரு சாமுண்டி விஹார் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில், மாவட்ட அளவில் நடத்தப்பட்ட விளையாட்டில் வெற்றி பெற்று, மாநில அளவில் விளையாட தகுதி பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.மொத்தம் நான்கு நாட்கள் நடக்கும் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளை, மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செய்து வருகிறது. இதில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனையர் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பித்து, உறுதி செய்து கொள்ள வேண்டும்.விண்ணப்பங்களை மைசூரு மற்றும் பெங்களூரில் உள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை கமிஷனர் அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். கிரிக்கெட், கபடி, கோ கோ, ஹாக்கி, ஜிம்னாஸ்டிக், தடகள போட்டிகள் உட்பட பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.வீரர் - வீராங்கனையர் மைசூரில் தங்கும் இடம், உணவு, மருத்துவ வசதி என அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அவர்களுடன் வரும் பயிற்சியாளர்கள், நடுவர்களுக்கும் தனி வசதி செய்யப்படுகின்றன.
14-Sep-2024