| ADDED : மார் 04, 2024 07:18 AM
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் 'இ -- ஆட்டோ' போக்குவரத்து வசதி செய்யப்படுகிறது. முதற்கட்டமாக எலச்சனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில், பெண்களே இயக்கும் இ -- ஆட்டோ சேவை துவங்கப்பட்டுஉள்ளது.மெட்ரோ ரயில் சேவையை மேம்படுத்தவும், பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்த, மக்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், 'ஆல்ஸ்டோம் இந்தியா' என்ற அமைப்பு இ -- ஆட்டோ சேவையை கொண்டு வர முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக எலச்சனஹள்ளி மற்றும் இந்திராநகர் மெட்ரோ ரயில் நிலையங்களில், 12 இ- -- ஆட்டோக்களை நிறுத்தியுள்ளது,ஆல்ஸ்டோம் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் ஆலிவர் லாசன் கூறியதாவது:பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களை ஊக்குவிக்கவும், பாதுகாப்பை மனதில் கொண்டும், அவர்களின் அன்றாட பயணத்துக்கு, தொழில்நுட்ப அடிப்படையிலான மின்சார ஆட்டோ சேவையை ஏ.எல்., நிறுவனம் அறிமுகப்படுத்தியது.இந்த ஆட்டோக்கள், பெண்களுக்காக, பெண்களால் இயக்கப்படுகின்றன. பெண் ஓட்டுனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 'மெட்ரோ ரைடு' மொபைல் செயலி மூலம் ஆட்டோக்களை முன்பதிவு செய்யலாம். பெண் ஓட்டுனர்கள் என்பதால், பெண்கள் தைரியமாக பயணிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.