இ - டேங்க் ஆப்ரோட் கார்
'டி.சி., - 2' நிறுவனம், 'இ - டேங்க்' என்ற முன்மாதிரி மின்சார ஆப்ரோட் காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கார், நடப்பாண்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இ - டேங்க்: இந்த காரில், இதுவரை எந்த காரிலும் இல்லாத அளவுக்கு, 184 கி.வாட்.ஹார்., திறன் கொண்ட பெரிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. கரடுமுரடான சாலைகள், மலை பாதைகள், காடுகள் என, பல்வேறு இடங்களில் பயணிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ், 300 எம்.எம்.,க்கும் அதிகமாக உள்ளது. இதன் வடிவமைப்பு, ஒரு மிருகத்தின் தோற்றத்தை போன்று இருக்கிறது. மற்றபடி வேறு எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.கார் வடிவமைப்பு மாற்றம் செய்யும் நிறுவனமான, 'டி.சி., 2' நிறுவனமும், மின்சார தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான 'மெர்குரி' நிறுவனமும் இணைந்து இந்த காரை உருவாக்கி உள்ளனர்.