உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் மீண்டும் நில நடுக்கம்; மக்கள் அச்சம்

டில்லியில் மீண்டும் நில நடுக்கம்; மக்கள் அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தை மையமாக வைத்து இன்று( ஜூலை 07) மாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் டில்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர்.ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தை மையமாக வைத்து நேற்று காலை 9:04 மணி அளவில் ரிக்டர் 4.4 அளவிலும், 10 கி.மீ., ஆழத்திலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பகுதி, டில்லியின் மேற்கில் இருந்து 51 கி.மீ., தொலைவில் உள்ளது.ஜஜ்ஜாரில் ஏற்பட்ட நிலநடுக்கம், ஹரியானாவின் பிற மாவட்டங்களான ரோஹ்தக், குருகிராம், பானிபட், ஹிசாரிலும் உணரப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wny5cuxo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஜஜ்ஜார் மாவட்டத்தை மையமாக வைத்து இன்று மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவானது. இதன் அதிர்வு டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணரப்பட்டது. இதனால், மக்கள் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தாமரை மலர்கிறது
ஜூலை 11, 2025 20:52

பேரிடர் காலங்களில் மக்களை காக்க இந்திய அரசு உள்ளது. அதற்கான பேரிடர் உதவியை உடனடியாக மத்திய அரசு செய்யும். எந்தவித அச்சமும் தேவை இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை