உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டவிரோத மதமாற்றம்: சங்கூர் பாபா மீதான விசாரணையை துவக்கியது அமலாக்கத்துறை

சட்டவிரோத மதமாற்றம்: சங்கூர் பாபா மீதான விசாரணையை துவக்கியது அமலாக்கத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உ.பி.,யில் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவருக்கு எதிராக விசாரணையை துவக்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், போலீஸ் அதிகாரிகள் மற்றும் வங்கிகளிடம் தகவலை கேட்டு உள்ளனர்.உ.பி.,யின் பல்ராம்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாதம்பூர் பகுதியை சேர்ந்த சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவரையும், அவரது கூட்டாளியான நஸ்ரின் என்பவரையும் கைது செய்துள்ளனர்.அவருக்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பணம் வந்து குவிந்துள்ளது. அந்த பணத்தை அவர் தவறாக பயன்படுத்தி இருக்கலாம் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. பணமோசடி தடுப்பு சட்டம், எப்சிஆர்ஏ சட்டத்தின் விதிமுறைகள் ஆகியன மீறப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.இந்நிலையில், சங்கூர் பாபாவுக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர். சங்கூர் பாபா மற்றும் அவர் தொடர்புடைய நபர்கள் பெற்ற பணம் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறியும் வகையில் விசாரணை நடந்து வருகிறது. இ்த பணத்தை வைத்து தான் சட்டவிரோத மதமாற்றத்திற்கும், சட்ட விரோத செயல்களுக்கும் பயன்படுத்தி இருக்கலாம் என அமலாக்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, சங்கூர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் நகல், அவருடன் கைது செய்யப்பட்ட நபர்கள், வங்கிக்கணக்குகள் ,அசையும் மற்றும் அசையா சொத்துகள் குறித்த விவரங்களை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் கேட்டுள்ளனர். மேலும், மாவட்ட கலெக்டர் மற்றும் வங்கி அதிகாரிகளிடமும் அவரின் சொத்து குறித்த விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sribalajitraders
ஜூலை 11, 2025 09:52

தனக்கு பிடித்த கடவுளை வழிபடுவதற்கு யாரிடமும் அனுமதி வாங்க தேவை இல்லை


Kasimani Baskaran
ஜூலை 11, 2025 03:54

கேரளாவில்த்தான் மதமாற்றம் மிக அதிகம். உண்டியல் மன்னரே அழகிகளை வைத்து தங்கம் கடத்தியது நினைவில் இருக்கலாம்.


Kudandhaiyaar
ஜூலை 10, 2025 23:02

தமிழகத்தில் எப்போது விடியுமோ. எனக்கு நடந்த சம்பவம் ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன், நான் ஒரு மாலிலிருந்து வெளியே வந்தேன். அங்கு காத்துக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் கையில் ஒரு பேப்பர் ஐ திணித்தார், அதை பார்ப்பதற்குள் பக்கத்தில் ஜெப கூட்டம் நடக்கிறது வாருங்கள் என்று கூப்பிட்டார். ட்ராபிக் அதிகம் இருக்கும் ரோடு ஆகவே, நான் பேச நேரம் இல்லை. வந்து விட்டேன். அவர் ஆட்டோ வேண்டுமா என்று கேட்டால் கூட பரவாயில்லை ஆனால் அவர் கூட்டத்திற்கு வர கூப்பிடுகிறார், அவருக்கு எது முக்கியம் என்று தெரிந்து செய்கிறார். நான் இந்து என்று அவருக்கு நன்றாக தெரியும் ஏனெனில் ஏன் நெற்றியில் இருக்கும் அடையாளம் போதும்


sridhar
ஜூலை 11, 2025 08:40

இலவசமாக கொடுத்தால் கூட ' அது' வேண்டாம். விஷம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை