உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதாரமின்றி பண மோசடி வழக்கு; ஈ.டி.,க்கு ரூ.1 லட்சம் அபராதம்

ஆதாரமின்றி பண மோசடி வழக்கு; ஈ.டி.,க்கு ரூ.1 லட்சம் அபராதம்

மும்பை: மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராகேஷ் ஜெயின் என்பவர் மீது போதிய ஆதாரங்கள் இல்லாமல் பணமோசடி விசாரணையைத் துவங்கிய ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த மும்பை உயர் நீதிமன்றம், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் கட்டுமான அதிபர் ராகேஷ் ஜெயின். இவர், மும்பையின் மலாட் பகுதியில் அடுக்குமாடி கட்டடம் கட்டி உள்ளார். இதில், சில தளங்களை குல் அச்ரா என்பவர் ஹோட்டல் அமைப்பதற்காக வாங்கினார்.

நம்பிக்கை மோசடி

அந்த கட்டடத்தின் பணி நிறைவு சான்றிதழை பெற்று வழங்குவதில் ராகேஷ் ஜெயின் தாமதம் செய்ததாக குல் அச்ரா போலீசில் புகார் கூறினார். 'கட்டடத்தின் உள்ளே குல் அச்ரா செய்யும் சில கட்டுமான வேலைகளால் தான் பணி நிறைவு சான்று பெறுவதில் தாமதம் ஏற்பட்டது' என ரியல் எஸ்டேட் அதிபர் ராகேஷ் ஜெயின் விளக்கம் அளித்தார்.இதனால், 'இது சிவில் வழக்காக தெரிகிறது' என கூறி மும்பை போலீசார் வழக்கு பதிய மறுத்தனர். இதையடுத்து குல் அச்ரா, அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை நாடி, வழக்கு பதிய மும்பை போலீசாருக்கு உத்தரவிடும்படி கோரினார். இது குறித்து விசாரிக்க மும்பையின் வில்லே பார்லே போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து குல் அச்ரா புகாரின் படி, அவரிடம் மோசடியாக பெற்ற பணத்தில் ராகேஷ் ஜெயின் அந்தேரியில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியதாக போலீசார் வழக்கு பதிந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்த அமலாக்கத் துறையினர், ராகேஷ் ஜெயினின் சொத்துக்களை முடக்கினர். இதை எதிர்த்து ராகேஷ் ஜெயின் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதி மிலிந்த் ஜாதவ் அளித்த தீர்ப்பு:

ஒப்பந்த மீறல் தொடர்பான இந்த வழக்கு சிவில் இயல்புடையது என மும்பை போலீசார் கூறிய போதும் குல் அச்ரா அதை மறைத்து அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன் புகாரை வில்லே பார்லே போலீசார் விசாரிக்க வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார்.அவர் மனதில் தீய நோக்கம் இருந்தது இதில் தெளிவாகிறது. ஒப்பந்தத்தை மீறுவது கிரிமினல் நம்பிக்கை மோசடி என்ற குற்றச்சாட்டின் கீழ் வராது.

துன்புறுத்த முடியாது

மேலும், வில்லே பார்லே போலீசுக்கு அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது, அதன் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. எனவே, போலீசார் பதிந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அதனடிப்படையில் அமலாக்கத் துறை பதிந்த வழக்கும் செல்லாதது. பணமோசடி தடுப்புச் சட்டம் என்ற போர்வையில் நடக்கும் அடக்குமுறைக்கான சிறந்த உதாரணம் இந்த வழக்கு. அமலாக்கத் துறையினர் சட்ட விதிகளின் படி செயல்பட வேண்டும், சட்டத்தை கையில் எடுத்து குடிமக்களை துன்புறுத்த முடியாது. இந்த செய்தியை அமலாக்கத் துறைக்கு அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டி இருப்பதால் அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஜன 23, 2025 12:14

அபராதம் மட்டும் போதாது, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சிறைத்தண்டனை கொடுத்தால் தான் அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாளாக இருப்பதை தடுக்க முடியும்!


அப்பாவி
ஜன 23, 2025 09:18

அபராதம் இருக்கட்டும். பொய் வழக்கு போட்ட தடியன்களை பணிநீக்கம் செய்து வூட்டுக்கு அனுப்புங்க. அவிங்க சொத்து விவரம் சேகரிச்சு பறிமுதல் செய்யுங்க.


Kanns
ஜன 23, 2025 09:06

Here Cheating& Looting by Violating Agreements are Grave Crimes But Biasedly HC Judge Acquitted Accused. BUT NO USE OF COURTS UNLESS they PUNISH Extensive MISUSE OF POWERS by Rulers, their Stooge Officials esp Bureaucrats& CaseHungry Investigator-Police, Judges, NewsHungry BiasedMedia, Vote/Power-Hungry Parties-Groups, Vested False Complainant Gangs women, Unions/Groups, SCs, advocates. SHAMEFUL JUSTICE


GMM
ஜன 23, 2025 09:00

மும்பை அடுக்கு மாடி. ஓட்டல் அமைக்க சில தளம். கட்டட உரிமையாளர் பணி நிறைவு சான்று பெறாமல் தாமதம் என்று ஓட்டல் உரிமையாளர் புகார் கூற முடியாது. நிறைவு சான்று பெறாமல் கட்டட உரிமையாளர் மற்றும் ஓட்டல் உரிமையாளர் பண பரிவர்த்தனை சட்ட விரோதம். போலீஸ் சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெறாமல் வழக்கு பதிய முடியாது. மாஜிஸ்திரேட் அவசர உத்தரவு தவறு. அமலாக்க துறை வழக்கு சட்டவிரோத பணபரிவர்தனையின் கீழ் தான் . அமலாக்க துறை விசாரணையின் போது நீதிமன்றம் தலையிட முடியாது. அபராதம் விதிக்க முடியாது. விசாரணை அமைப்புகளை நீதிமன்றம் விசாரிக்க மாநில அளவில் கவர்னர் மத்திய அரசு அளவில் ஜனாதிபதி அவர்கள் அனுமதி பெற வேண்டும். வழக்கறிஞர் மீது அமலாக்க துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதியின் தவறான தீர்ப்பு பற்றி உயர் அதிகாரிக்கு புகார் கொடுக்க வேண்டும். உத்தரவு அமுலாக்க பணி ஆர்வத்தை குறைத்து விடும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 23, 2025 08:11

அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த மும்பை உயர் நீதிமன்றம், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது... அபராதத்தை மக்களின் வரிப்பணத்தில் இருந்துதானே அமலாக்கத்துறை செலுத்தும் ????


Kasimani Baskaran
ஜன 23, 2025 08:00

அடுக்கு மாடி எப்படி கட்டினார், விற்றார் என்று நோண்டினால் அமலாக்கத்துறையும் சங்கியாகிவிடும்...


VENKATASUBRAMANIAN
ஜன 23, 2025 07:41

ஒரு சில கருப்பு ஆடுகள் உள்ளன. அவை களை எடுக்கப்பட வேண்டும்


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
ஜன 23, 2025 05:41

அருமை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை