உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலுக்கு வந்தது புது சிக்கல்: வழக்குத் தொடர அமலாக்கத்துறைக்கு கவர்னர் அனுமதி!

கெஜ்ரிவாலுக்கு வந்தது புது சிக்கல்: வழக்குத் தொடர அமலாக்கத்துறைக்கு கவர்னர் அனுமதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபானக் கொள்கையில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அமலாக்கத்துறைக்கு கவர்னர் சக்சேனா அனுமதி வழங்கி உள்ளார்.டில்லியில் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி முக்கிய நிர்வாகிகளான எம்.பி., சஞ்சய் சிங், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகினர். கடந்த ஆண்டு முதல்வராக இருந்த கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார்.ஆறு மாதம் சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது. இந்த நிபந்தனைகள் காரணமாக முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் விலகினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=neuzqvfm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், மதுபானக் கொள்கையில் நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக கெஜ்ரிவால் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினா். ஆனால், அதன் மீதான விசாரணை துவங்காமல் இருந்தது. அரசு பதவியில் இருப்பவர்கள் மீது அரசின் அனுமதி இல்லாமல், வழக்குப்பதிவு செய்யக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர டில்லி கவர்னரின் அனுமதியை பெற வேண்டிய நிலை அமலாக்கத்துறைக்கு ஏற்பட்டது. கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு கவர்னர் சக்சேனாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இந்நிலையில் கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர அமலாக்கத்துறைக்கு கவர்னர் விகே சக்சேனா அனுமதி அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக டில்லி முதல்வர் அதிஷி கூறியதாவது: கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர கவர்னர் அனுமதி அளித்து இருந்தால் அதற்கான கடிதத்தை அமலாக்கத்துறை வெளியிட வேண்டும். உண்மையான விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்பவும் பா.ஜ., சதி செய்கிறது என்றார்.மணீஷ் சிசோடியா கூறுகையில், அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் கருத்து தொடர்பான விவகாரத்தில் இருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சி இது எனக்குற்றம்சாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Duruvesan
டிச 21, 2024 18:21

அதான் 10 வருசமா பாக்கிறோமே, செந்திலு உள்ள போனார் வந்தார் மினிட்ர் ஆயிட்டாரு, ராவுள் லாலு சோனியா சிதம்பரம் கெஜ்ரி கவிதா எல்லோரும் வாழ்நாள் பெயில்


என்றும் இந்தியன்
டிச 21, 2024 18:19

அல்லு அர்ஜூனால் கூட்டம் அதிகமாகி தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒரு பெண் உயிரிழந்தார் என்று கைது செய்தார்கள் அதைப்போலவே இவரது ஆட்சியில் மதுபானக்கொள்கை பணப்பரிமாற்றம் கோல்மால், அப்போ இவர் தானே முதலமைச்சர் ஆகவே இவரை கைது செய்ய வேண்டும்


GMM
டிச 21, 2024 17:13

மத்திய, மாநில, யூனியன் அரசு பதவி. அரசு பதவி என்பது நிரந்தர அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தும். மாநில அரசு ஊழியரை விசாரிக்க மட்டும் கவர்னர் அனுமதி தேவை. நடைமுறையில் இல்லை. ? அரசியல் அமைச்சர் பதவி தற்காலிகம். மத்திய விசாரணை அமைப்புகள் விசாரிக்க அரசு /கவர்னர் அனுமதி தேவையில்லை. வக்கீல் கட்டாயம், சட்டம், நிர்வாக விதிகள் கற்று தேறி இருக்க வேண்டும். அமலாக்க சட்டம், விதி தேறிய வக்கீல் மட்டும் தான் வழக்கில் ஆஜர் ஆக வேண்டும். நீதிபதிகளை வழக்கறிஞர் குழப்பி வருகின்றனர். விசாரிக்க இவ்வளவு நடைமுறை இருக்காது. இருந்தால், அரசியல் குற்றம் தடுப்பது கடினம். கட்சிகள் கண்மூடி அறிக்கை வெளியிட்டு குழப்பி வருகின்றனர். கெஜ்ரிவால் எப்போதோ டிஸ்மிஸ் செய்ய வேண்டிய அரசியல் சேவகர்.


Nallavanaga Viruppam
டிச 21, 2024 16:59

ஆக அதிகாரம் வந்தவுடன் ஆட்சியை தக்க வைக்க கட்சியை வளர்க்க பணம் தேவை படுகிறது. அதிகார போதையா அல்லது இருப்பை தக்க வைக்க முயற்சியா? மக்களை காக்க அல்ல என்பது நிதர்சனம்.


Sampath Kumar
டிச 21, 2024 16:58

அமலா பால் வளத்துறை டைரக்டர் சொன்ன படி நடக்கும் துறை


Palanisamy Sekar
டிச 21, 2024 16:44

டெல்லி முதல்வர் அதிதி ரொம்ப துள்ளுறாரே. அமலாக்கத்துறையானது யாரை விசாரிக்க வேண்டுமோ அவர்களுக்கு மட்டுமே விசாரணைக்கு சம்மன் அனுப்பும்போது தெரிவதற்குள் அவசரக்குடுக்கை போல விச்வாசத்தை காட்டுவதாக எண்ணிக்கொண்டு அலறுகின்றார். ஒட்டுமொத்த கட்சியே சுவாஹா ஆகப்போகிறது. இந்த முறையோடு ஆட்டம் குளோஸ்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை