உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆங்கில வழியில் கல்வி கற்பது தற்கொலைக்கு சமம்: சக்லானி

ஆங்கில வழியில் கல்வி கற்பது தற்கொலைக்கு சமம்: சக்லானி

புதுடில்லி: 'தாய் மொழியில் கற்காமல், ஆங்கில வழியிலேயே கல்வி கற்பது தற்கொலைக்கு சமம்' என பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டங்களை வகுத்து தரும், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தலைவர் சக்லானி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: நீண்டகாலமாகவே நம் நாட்டில் ஆங்கிலவழிக் கல்வி மீது பெற்றோருக்கு ஒரு ஈர்ப்பு, மோகம் உள்ளது. போதிய ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், தகுதியான ஆசிரியர்கள் இல்லாவிட்டாலும், ஆங்கில வழியிலேயே தங்களுடைய குழந்தைகளுக்கு கற்றுத்தர விரும்புகின்றனர்; இது தற்கொலைக்கு சமம்.அரசுப் பள்ளிகளில் நல்ல தரமான கல்வி வழங்கப்படுகிறது. ஆங்கிலவழிப் படிப்புகளில் அதிகளவு பாடங்கள் திணிக்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் அறிவாய்ந்தவர்களாக இருப்பதில்லை. தங்களுடைய கலாசாரம், தங்களுடய மண்ணின் மூலங்களுடனான தொடர்பை இழக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட விஷயத்தை, தாய்மொழியில் கற்பதன் வாயிலாக, மாணவர்களுக்கு அதில் உணர்வுபூர்வமான தொடர்பு இருக்கும். மேலும், சிறந்த முறையில், எளிதில் கற்க முடியும்.இதைத்தான், புதிய தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. மாணவர்கள் தங்களுடைய தாய்மொழியில் படிப்பதுடன், மற்ற மொழிகளையும் கற்க வேண்டும். படங்கள், கதைகள், பாடல்கள் வாயிலாக பாடத்தைக் கற்கும்போது, அதுவும் தாய்மொழியில் கற்கும்போது, சிறந்த அறிவை மாணவர்கள் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

அப்புசாமி
ஜூன் 19, 2024 22:00

NCERT ந்னு இங்கிலுஷ்ல போர்டு வெச்சுட்டு தாய்மொழியில் படிங்கன்னு புத்திமதி சொல்லும். மாணவர்களே உஷார்.


venugopal s
ஜூன் 19, 2024 13:31

இவர் தம் பிள்ளைகளை தாய்மொழி கல்வி வாயிலாகப் படிக்க வைத்தாரா என்று முதலில் சொல்லட்டும் பார்க்கலாம்!


Narayanan Muthu
ஜூன் 19, 2024 12:56

எல்லோரும் தற்குரியாவே இருங்க அதுதான் எங்கள்மாதிரி ஆட்களுக்கு நல்லதுங்கிறார் இவர்.


S.kausalya
ஜூன் 19, 2024 12:00

ஒரு நாடு, நாடு முழுமையும் ஏற்றுக் கொள்ள ஒரே மொழி, என்றால் மட்டுமே அதை தாய் மொழியாக ஏற்று அதில் கல்வி கற்கலாம். இங்கு 7000 மொழி, தாய் மொழியாக உள்ளது. இந்நிலையில் ஆங்கிலமே அனைவரும் ஏற்கும் மொழியாக உளளது. நாம் நாட்டில் ஆங்கிலம் தவிர்த்த தாய் மொழி கல்வி சாத்தியம் இல்லை


S.kausalya
ஜூன் 19, 2024 12:00

ஒரு நாடு, நாடு முழுமையும் ஏற்றுக் கொள்ள ஒரே மொழி, என்றால் மட்டுமே அதை தாய் மொழியாக ஏற்று அதில் கல்வி கற்கலாம். இங்கு 7000 மொழி, தாய் மொழியாக உளளது. இந்நிலையில் ஆங்கிலமே அனைவரும் ஏற்கும் மொழியாக உளளது. நாம் நாட்டில் ஆங்கிலம் தவிர்த்த தாய் மொழி கல்வி சாத்தியம் இல்லை


ஆரூர் ரங்
ஜூன் 19, 2024 10:39

அன்னிய மொழியில் புரியாமல் பாடங்களை படித்துவிட்டு ஆராய்ச்சி விஞ்ஞானியாக முடியுமா? அரசுப்பள்ளிகளில் தரமான ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதுதான் தீர்வு. அறிவியலில் நோபல் பரிசு பெற்ற பெரும்பாலானவர்கள் ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழியில் அறிவியல் பயின்றவர்கள். ஆங்கிலம்தான் அறிவின் அடையாளம் என நினைப்பது மடமை. தமிழக முதல்வர் ஆங்கிலத்தில் புலமை பெற்றா உயர்ந்துள்ளார்?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 19, 2024 10:39

நேற்று ஒரு அதிபுத்திசாலி நீதிபதி கயிறு கட்ட கூடாது பொட்டு வைக்க கூடாது மாணவர்கள் என்று அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார். அப்பொழுது முஸ்லிம் பெண்கள் பர்தா அணியாமல் பள்ளிக்கு வர வேண்டும் கிறிஸ்துவர்கள் சிலுவை அணியாமல் பள்ளிக்கு வர வேண்டும். செய்வார்களா? ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு முற்றிலும் தடை செய்ய வேண்டும் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரையில்.


Sridhar
ஜூன் 19, 2024 10:26

Let him confirm first whether his children had studied in English medium or in hindi medium


சோணாச்சலம்
ஜூன் 19, 2024 08:45

பாவம்..நான் தான் இங்கிலீஷ்ல படிச்சு NCERT பெரிய ஆளா வந்தூட்டேன். நீங்கள்ளாம் இங்கிலுஷில் படிச்சுட்டா, என் மாதிரி ஆளுங்களுக்கு பதவி நீட்டிப்பு யார் குடுப்பா. தாய்மொழியில் படிச்சிட்டு திண்ணையை தேய்ங்க. நான் இங்கிலீஷ் ஸ்டைலில் கிட், சூட், டை எல்லாம் போட்டுக்குட்டு உங்களுக்கு லெக்ச்சர் அடிப்பேன்.


அரசு
ஜூன் 19, 2024 08:10

அவர் சொல்வது மிகவும் சரியான, நியாயமான கருத்து. ஆனால் தாய் மொழியில் படித்தால் வெளி நாட்டு வேலை வாய்ப்பு கிடைக்காதே.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை