உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியை தேர்ந்தெடுங்கள்: 2 நிமிட வீடியோவுடன் பிரசாரத்தை துவக்கிய பா.ஜ.,

மோடியை தேர்ந்தெடுங்கள்: 2 நிமிட வீடியோவுடன் பிரசாரத்தை துவக்கிய பா.ஜ.,

புதுடில்லி: தேசிய அளவில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை பா.ஜ.,துவக்கியது. 'மோடியைத் தேர்ந்தெடுங்கள்' என்ற பெயரில் 2 நிமிட வீடியோவை பா.ஜ., சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சி தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ., இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று ஆயத்தமாக செயல்பட்டு வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aqv00qme&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில் பா.ஜ.,வின் முதல் பிரசார வீடியோவை பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வெளியிட்டார். வீடியோவில், ராமர் கோயில் திறப்பு, நிலவில் சந்திரயான் விண்கலம் இறங்கியது உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. கட்சித் தொண்டர்கள் அனைவரும் மக்களின் உணர்வுடன் தங்களை எதிரொலிக்க வேண்டும். இந்த முக்கியமான பிரசாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரப்ப வேண்டும் என்றும் நட்டா வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.

பா.ஜ., தேர்தல் அறிக்கை

லோக்சபா தேர்தலில் பா.ஜ., அறிக்கையில் இடம்பெற வேண்டிய வாக்குறுதிகள் குறித்து, நமோ செயலி மூலம் கருத்து தெரிவிக்கலாம் என பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

g.s,rajan
ஜன 26, 2024 09:48

பி.ஜே.பி இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனியார் நிறுவனங்கள் மக்களிடம் அநியாயக் கொள்ளை அடிக்கும்...வருமானம் அனைத்தையும் ஒன்றும் இல்லாமல் மக்களைச் சுரண்டிவிடுவார்கள்....


g.s,rajan
ஜன 26, 2024 09:32

இந்தியாவில் அரசாங்க நிறுவனங்கள் இனி இருக்குமா....???


Ramesh Sargam
ஜன 26, 2024 08:17

ஊழலற்ற, நேர்மையான ஆட்சி வேண்டும் என்றால் மீண்டும் தேர்ந்தெடுப்பீர் பாஜக மற்றும் மோடி அவர்களை.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை