உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் பத்திரங்கள் திட்டம்: மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

தேர்தல் பத்திரங்கள் திட்டம்: மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: மத்திய அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை 2017 ல் அன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். தேர்தல் செலவுக்காக கட்சிகள் வசூலிக்கும் நன்கொடை ரொக்கமாக இல்லாமல் வங்கி வழியாக கைமாறினால், கருப்பு பணத்தை தடுக்கலாம் என்பதால் இந்த திட்டத்தை கொண்டு வருவதாக அவர் கூறினார். தேர்தல் பத்திரங்கள் 1,000 ரூபாய், 10,000 ரூபாய், 1 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், 1 கோடி ரூபாய் என ஐந்து மதிப்புகளில் தயாரிக்கப்பட்டன. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் மட்டுமே அவை விற்கப்படும் என்றும் ஜெட்லி கூறியிருந்தார். தனிநபர்களோ கம்பெனிகளோ பத்திரங்களை வாங்கி அவர்கள் விரும்பும் கட்சிகளுக்கு நன்கொடையாக கொடுக்கலாம். அதை பெற்றுக் கொள்ளும் கட்சி 15 நாட்களுக்குபின் அதை வங்கியில் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். அந்த கட்சியின்கணக்கில் தொகை வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்த சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்கூர் ஆகியோர் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பர்திவாலா,, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரித்து வழங்கிய தீர்ப்பில், தேர்தல் பத்திரங்கள் திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பொது மக்களின் தகவல் அறியும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கும் எதிரானது . தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கினர்.இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும், திறந்தவெளி நீதிமன்ற அறையில் விசாரணை நடத்த கோரியும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், '' மறு சீராய்வு மனுவை ஆய்வு செய்ததில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பில் எந்த தவறும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் 2013ம் ஆண்டு விதிப்படி, மறு சீராய்வு தேவையில்லை. எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன'' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anantharaman Srinivasan
அக் 05, 2024 23:05

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக வசூல் செய்த தேர்தல் பத்திரத்தை தவறு என்று தீர்ப்பு வழங்கி நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் அந்த. தவறை செய்த குற்றவாளிகளை தண்டிக்காமல் மௌனம் காப்பதேன்.


Dharmavaan
அக் 05, 2024 19:46

கொலீஜியும் முறை ஒழிந்தால்தான் இது உருப்படும் மோடி துணிந்து அதை நீக்க வேண்டும்


GMM
அக் 05, 2024 19:24

தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. தேர்தல் செலவிற்கு கட்சிகள் நன்கொடை எப்படி பெற வேண்டும் என்று மனுதாரர், வக்கில், நீதிபதிகள் கூற மறுத்து விட்டனர். ஏன்? நன்கொடை தகவல் அறியும் உரிமையில் வராது? கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் ஏராளமாக பண நன்கொடை பெற்று இருப்பர். பொது மக்கள் தகவல் சட்ட உரிமையின் கீழ், ஜனநாயக சீர்திருத்த சங்கம், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி பெற்ற பண நிதி விவரங்கள் அரசியல் சட்டத்தின் படி அறிய உச்ச நீதி மன்றம் அனுமதிக்குமா? இது அரசின் நிதி கொள்கை. மத்திய அரசின் நிதிதுறை, தேர்தல் ஆணைய அதிகாரத்தின் கீழ் வரும். நிதி கொடுத்தவர் / பெற்றவர் தாவாவை மட்டும் தான் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.


nagendhiran
அக் 05, 2024 19:03

தேர்தல் பந்திரங்கள் வெளிபடதன்மை இல்லை சரி? அதற்கு முன்பு இருந்தது?


Lion Drsekar
அக் 05, 2024 18:34

இன்றைக்கு எல்லோர் கைகளிலும் மீடியா வந்துவிட்டது , முன்பெல்லாம் வழிப்பறிக்கொள்ளையர்கள் எதிர் திசைகளில் சாலைகளில் வழிப்போக்கற்போல் நின்றுகொண்டு இருப்பார்கள் , காவல் குறையினர்கள் 2 கி மீ தூரம் வரும்போதே அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் ரகசிய செய்கைகள் வழியாக செய்தியைப் பரப்ப அடுத்த நொடியில் எல்லோரும் மறைந்து போவார்கள் , ஆனால் இன்று எல்லோருக்கும் கைபேசி ஒரு வரப்பிரசாதம், தவறு செய்யும் இடத்தில இருந்தே தன முகத்தையும் மறைக்காமல் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் காலம், அப்படி இருக்க எதற்க்காக தேர்தல் நிதி ? இதனால்தான் நிதி என்ற பெயரில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு சலுகைகள் கொடுக்கவேண்டிய ஒரு கட்டாயம் , குளத்தில் வீசப்பட்ட கற்களைப்போல் இந்த நிதியைப் பெறுவதற்காக வீசப்படும் வலையில் ஏற்படும் வளையங்கள் ஒவ்வொரு நிலையிலு,ம் அந்த நிதி அவர்களுக்கு, அவர்களுக்கு என்று கைகாட்டி , இவர்கள் மிகப்பெரிய அளவில் செட்டில் ஆகிக்கொண்டு வரும் நிலை உருவாகிவிட்டது . இதனால்தான் படித்து , வேலைக்குப்போய் சம்பாதிப்பதை விட அரசியலில் எல்லாமே வீடுதேடி கொண்டுவந்து கப்பம் கட்டும் நிலை உருவானதால் , தினம் ஒரு கட்சிகள் உதயமாகிக்கொண்டு வருகிறது . முடிவு வியாபரிகள், தொழில் முனைவோர்கள் இதயத்தில் அடிமேலடி விழுந்து கொண்டே இருக்கிறது . முதலில் தேர்தல் நேரத்தில் வீதிகளில் , போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதை தவிர்த்து, மேடைகளில் அநாகரீகமாக பேசி, மக்களை தீய சக்திகளுக்கு தூண்டிவிடுவதற்காக நிதி ? ஒரு திரைப்படம் எப்படி வெற்றி ஏறுகிறதோ அதுபோல் , ஆள்பவர்கள் மக்களுக்காக ஆட்சி செய்தால் அவர்களுக்கு விளம்பரமே தேவையே இல்லையே , பொழுவிடிந்தால் ஜாதி, மத , மொழி வெறியைத் தூண்டுவதை தவிர வேறு என்ன பிரச்சாரம் நடக்கிறது, ஆகவே இதுபோன்ற பாத்திரம், பத்திரம் இவைகளை தடை செய்யவேண்டும் , வந்தே மாதரம்


Sathyanarayanan Sathyasekaren
அக் 05, 2024 21:18

அய்யா லைன், ஆக பழையபடி 10 கோடி நன்கொடை வசூலித்தால் 1 கோடி கட்சி கணக்கிலும், 9 கோடி கட்சி தலைவர் குடும்ப பினாமி பெயரிலும் கொள்ளையடிக்க வசதி செய்யவேண்டும் ஏந்துகிறீர்கள்? வங்கி வழியாக கொடுத்தால் கொடுத்தது ரகசியமாக இருந்தாலும் வருமான வரி கணக்கில் இருக்கும், கருப்பு பணத்திற்கு வழி இல்லை. ரொக்கமாக கொடுத்தால். இதற்க்கு என்ன பதில்?


ஆரூர் ரங்
அக் 05, 2024 18:14

பழையபடி தேர்தல் நிதியை கறுப்புப் பணமாக அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கலாம். அதில் பெரும்பகுதியை அவர்கள் தீவீரவாத ஆட்களின் ஹவாலா மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் . நாடு வெளங்கிடும்.


முக்கிய வீடியோ