உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 வாக்காளர்களுக்கு ஒரே அடையாள எண் பிரச்னை இல்லை! மம்தா புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம்

2 வாக்காளர்களுக்கு ஒரே அடையாள எண் பிரச்னை இல்லை! மம்தா புகாருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம்

புதுடில்லி: 'வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு, ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தால், அது போலி என்று கூற முடியாது' என தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. அங்கு அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில், சமீபத்தில் மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது: தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்காக மோசடி நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், குஜராத், ஹரியானாவில் உள்ள வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு போலி வாக்காளர்களை உருவாக்கி, இங்கு தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.,வுக்கு தேர்தல் கமிஷன் உதவுகிறது. மஹாராஷ்டிரா, டில்லியில் உள்ள கட்சிகள் இதை கண்டுபிடிக்கவில்லை. அங்கு நடந்த சட்டசபை தேர்தல்களிலும் பா.ஜ., இப்படித்தான் போலி அடையாள அட்டை வாயிலாக வென்றுள்ளது. மேற்கு வங்கத்தில் அதுபோல் மோசடி செய்ய விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது: ஒரு மாநிலத்தில் உள்ள வாக்காளருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை எண் போலவே, மற்றொரு மாநிலத்தில் உள்ள வாக்காளருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது போன்று, ஒரே அடையாள எண் இரண்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம். இதை போலி என கூறமுடியாது. ஆனால், அவர்களுடைய வசிப்பிட விபரம், சட்டசபை தொகுதி விபரம், ஓட்டுச் சாவடி விபரம் வெவ்வேறாக இருக்கும்.வாக்காளர் அடையாள அட்டையில் கூறப்பட்டு உள்ள ஓட்டுச் சாவடியில் மட்டுமே ஓட்டளிக்க முடியும். ஒரே அடையாள எண் இருப்பதால், ஒரு மாநிலத்தில் உள்ளவர், மற்றொரு மாநிலத்தில் ஓட்டளிக்க முடியாது.தேர்தல் தொடர்பான தகவல்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதற்கு முன், அந்தந்த மாநிலங்களில் உள்ள தேர்தல் கமிஷன் அதிகாரிகளே, இவ்வாறு எண்களை ஒதுக்கினர். அதனால், ஒரே எண், வெவ்வேறு மாநிலங்களில் உள்ள இரண்டு பேருக்கு கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது.இருப்பினும், இந்த விஷயத்தில், ஒவ்வொரு வாக்காளருக்கும் தனி குறியீட்டு எண்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mecca Shivan
மார் 03, 2025 11:44

ஒரே எண்ணை கொண்டு பல வாக்காளர் அட்டை என்பது மோசடியே ..ஒரே என்னைக்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் அட்டை பான் கார்டு வாகன பதிவெண் இருந்தால் அது மோசடி இல்லை என்று அர்த்தமா ? டிஜிட்டல் இந்தியா என்று கூறிக்கொண்டு ஒன்றிய அரசு பல விஷயங்களில் சொதப்பி வருகிறது என்பதுதான் உண்மை.. வெகு ஜனங்கள் தங்களது ஆதார் அட்டை, பான் கார்டு பாஸ்போர்ட் போன்றவைகளில் திருத்தம் செய்ய அலைவது கொடுமை.. அதிலும் ஆதார் அட்டை திருத்தும் ஒன்லைனில் செய்வது இயலலாதது ..ஒவ்வொருமுறையும் ஐம்பது ருபாய் திருடப்படுகிறது.. தபால் அலுவலகத்தில் செய்தல் இந்த தில்லு முள்ளுதான்.. இப்படியெல்லாம் சம்பாதிப்பது ஒன்றிய அரசுக்கு அழகில்லை .. ஆதார் மையம் சென்னையில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது.. அங்கும் அலைகடலனே கூட்டம்


Venkateswaran Rajaram
மார் 03, 2025 09:54

தப்பு பண்றவன் தான் தப்பு தப்பா யோசிப்பான். இவள் ஜெயித்தால் மட்டும் தேர்தல் சரி.. பிஜேபி ஜெயித்தால் தேர்தல் தப்பு.. இவர் தோற்றால் நொண்டி சாக்கு சொல்வதற்கு தயார் செய்து வைத்துக் கொள்கிறார்


தமிழன்
மார் 03, 2025 08:34

ஓ அப்படியா?? இதே நம்பர் விளக்கம் பேன் கார்டு நெம்பருங்கும் பொருந்துமா????


Gopi
மார் 03, 2025 12:34

ஆதாருடன் இணைக்கப்பட்ட எந்த அரசு வழங்கும் அத்தாட்சியிலும் பத்திரப்பதிவு உட்பட கோல்மால் செய்யமுடியாது. தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்களுக்கு எவ்வாறு பல தரவு குறியீடுகளை கொண்டு தனித்துவ தரவுப்புலம் அமைக்கமுடியும். தேர்தல் ஆணையம் கூறியதுபோல் இதில் தவறிழைக்க வாய்ப்பில்லை. இருந்தும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரோடு இணைப்பது வழக்காடு மன்றத்தில் நிலுவையில் உள்ளது


கிஜன்
மார் 03, 2025 08:06

70 மணி நேர வேலை.. நாராயண மூர்த்தி கம்பெனி வேலையா இருக்கும்... ஒரு நல்ல கம்பெனியா பார்த்து தனித்த எண் கொடுங்கள் ...


Minimole P C
மார் 03, 2025 07:51

Good explanation by EC.


GMM
மார் 03, 2025 07:27

வாக்காளர் அடையாள எண் கொண்டு வாக்களிப்பது இல்லை. வாக்காளர் வசிப்பிட தொகுதியில் தான் வாக்களிக்க முடியும். முன்பு ஒவ்வொரு மாநிலமும் வாக்காளர் அட்டை வழங்க உதவிய போது, அங்கு வரிசை எண் கொடுக்கப்பட்டன. தேசிய அளவில் ஒரு நிரந்தர வாக்காளர் எண் பிறப்பு, குடியுரிமை, அடிப்படையில் அவசியம். வருமான வரி நிரந்தர கணக்கு எண் , ஆதார் எண் போல் ஒருவருக்கு ஒரு எண் அவசியம். ஒன்றுக்கு மேற்பட்ட நிரந்தர எண்ணை இணைக்க வேண்டும். மம்தா புகார் அர்த்தம் இல்லாதது. வாக்காளர் அட்டை பற்றி புரிதல் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை