உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வணிக சந்தையில் ஒரு வரப்பிரசாதம்; எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏகோபித்த வரவேற்பு!

வணிக சந்தையில் ஒரு வரப்பிரசாதம்; எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏகோபித்த வரவேற்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 8.93 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில் 7.45 லட்சம் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. அதாவது, 1.48 லட்சம் அதிகப்படியான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.வாகனங்கள் இல்லாத வீடும், வாகனங்கள் இல்லாத ரோடும் இந்த நவநாகரிக உலகில் இல்லை. வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் அணிவகுக்கும் காட்சியை தினமும் பார்க்கலாம். எரிபொருளை பயன்படுத்தி வாகனங்கள் விற்பனையான காலம் தற்போது கரைய ஆரம்பித்து எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்கள் நகரும் காலம் தொடங்கி விட்டது.அது உண்மை தான் என்று கட்டியம் கூறும் வகையில் நாட்டில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 8.93 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 7.45 லட்சம் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.கடந்த மாதமான செப்டம்பரில் மட்டும் அனைத்து மாடல்களிலும் கிட்டத்தட்ட 1.59 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்தாண்டில் இதே மாதத்தில் 1.29 லட்சமாக இருந்துள்ளது. அதாவது, முந்தைய ஆண்டை காட்டிலும் இந்தாண்டில் 23 சதவீதம் அதிகப்படியான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டின் செப்டம்பர் மாத தரவுகளின் படி எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை 90,000 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்தாண்டு இது வெறும் 64,000 என்று தான் இருந்தது. மிகவும் பிரபலமான ஓலா நிறுவனம் இந்த செப்டம்பரில் 24,659 வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. கடந்த மாதமான ஆகஸ்ட்டை ஒப்பிட்டு பார்க்கும் போது உற்பத்தி குறைந்திருந்தாலும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் இந்த நிறுவனமே முன்னணியில் இருக்கிறது.பஜாஜ் நிறுவன வாகனங்கள் செப்டம்பரில் 19,103 வாகனங்கள் உற்பத்தி செய்து 2வது இடத்தை பிடித்து இருக்கிறது. ஈத்தர் எனர்ஜி நிறுவனம் புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தியதன் காரணமாக, 12,676 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.எலக்ட்ரிக் வாகனங்கள் மீது வாகன சந்தையில் வெவ்வேறான கருத்துகள் முரண்பட்டாலும், வாடிக்கையாளர்கள் அதை விரும்பி வாங்குவதே உற்பத்தி உயரக்காரணம் என்று கூறுகின்றனர் வணிக சந்தையை உற்றுநோக்குபவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kalyanaraman
அக் 02, 2024 18:37

எந்த எலக்ட்ரிக் வாகனத்திற்கும் ரீசேல் வேல்யூவே கிடையாது. பேட்டரி போச்சுன்னா வண்டி பேரிச்சம் பழத்துக்கு தான்.


Antony Melban
அக் 06, 2024 20:57

ஒவ்வொரு மாதமும் நீங்கள் பெட்ரோல் மற்றும் இதர பராமரிப்பிற்கு ஆகும் செலவை சேர்த்து வைத்தால் புது பேட்டரி வாங்கி வாகனத்தை புதிதாக ஓட்டலாம்


Mohan Raj
அக் 02, 2024 15:08

மின்சார வாகனங்கள் மீது மக்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை.மற்றும் விலை மிகவும் அதிகமாக உள்ளது


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 02, 2024 13:34

இப்படித்தான் சூரிய ஒளி மின்சாரத்தையும் விளம்பரப்படுத்தினார்கள். சோலார் பேனல் அமைத்தால் மானியம் என்றார்கள். தெருவிளக்குகளுக்கு சூரிய ஒளி என்றார்கள். பலரும் அதை நம்பி சோலார் பேனல் அமைத்தார்கள். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர், பராமரிப்பு செலவு மிகவும் கூடுதல் என்பதால் நெடும் சாலைகளில் உள்ள சோலார் விளக்குகளை அரசே அப்புறப்படுத்தி வருவதாகவும் அதற்கு மாற்றாக பழைய மின் விளக்குகளை பொருத்துவதாகவும் செய்தி வெளியானது. இதே நிலைதான் நாளை பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கும்


Lion Drsekar
அக் 02, 2024 13:07

அரசாங்கம் என்பது ஒரு வியாபார நிலையம், இவர்களுக்கும், மக்கள் பிரநிதிகளுக்கும் சம்பளம், பென்சன், மற்றும் இலவச விமான பயணம், மொத்தத்தில் ராஜ வாழ்வு வாழ மக்கள் வரிப்பணம் அவசியம் அதற்கும் இந்த எலக்ட்ரிக் வாகனத்துக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கலாம், சின்ன மீனைப்போட்டு பெரிய மீனைப் பிடிப்பார்கள் .


narayanansagmailcom
அக் 02, 2024 12:30

இது எலக்ட்ரானிக் யுகம்


Ramesh Sargam
அக் 02, 2024 12:04

கடன் வாங்கியாவது வாகனங்களை வாங்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் மாதா மாதம் கடன்கொடுத்தவர்கள் EMI கேட்கும்போது முகத்தை சுளிப்பார்கள், கொடுக்கமுடியாது என்று தெனாவட்டாக பேசுவார்கள். ஒரு சிலர் நியாயமாக EMI -யை நேர்மையாக திருப்பி செலுத்துவார்கள்.


Loganathan Kuttuva
அக் 02, 2024 12:03

Battery can be ged from solar panel power.


Loganathan Kuttuva
அக் 02, 2024 12:00

EV vehicle battery can be ged through solar panel at free of cost.