உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவி, 2 மகன்களை கொன்று மின்வாரிய அதிகாரி தற்கொலை

மனைவி, 2 மகன்களை கொன்று மின்வாரிய அதிகாரி தற்கொலை

கலபுரகி; கர்நாடகாவில் மனைவி, இரண்டு மகன்களை கொலை செய்த மின்வாரிய அதிகாரி, தானும் தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக மாநிலம், கலபுரகி நகரில் வசித்தவர் சந்தோஷ், 45. இவர் மின்வாரியத்தில் உதவி கணக்கு அதிகாரியாக பணியாற்றினார்.

தகராறு

இவரது மனைவி ஸ்ருதி, 35. தம்பதிக்கு முனீஷ் என்ற, 9 வயது மகனும், பிறந்து மூன்று மாதமேயான அனிஷ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.ஏழு ஆண்டுகளுக்கு முன் சந்தோஷுக்கு, ஸ்ருதியின் குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டது. இதனால் தாய் வீட்டுக்கு செல்ல கூடாது என, மனைவியை கட்டுப்படுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தவிர, குடும்ப பிரச்னை, ஸ்ருதியை தாய் வீட்டுக்கு அனுப்பாதது போன்ற காரணங்களால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு நடந்தது. நேற்று முன்தினம் இரவு, சந்தோஷ் பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது, வழக்கம் போல வாக்குவாதம் நடந்தது. இது குறித்து ஸ்ருதி, தன் தந்தைக்கு போன் செய்து நடந்ததை கூறினார். தந்தையும் பொறுமையுடன் இருக்கும்படி மகளை சமாதானம் செய்து உள்ளார்.இதனால் கோபமடைந்த சந்தோஷ், மனைவி, இரண்டு மகன்களின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின், தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடும்ப பிரச்னை

நேற்று காலை, இவர்கள் வெளியில் வராததை அறிந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, நால்வரும் சடலமாக கிடந்தது தெரியவந்தது. கலபுரகி போலீசார், நால்வரின் உடல்களை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவத்துக்கு குடும்ப பிரச்னை காரணமா அல்லது வேறு காரணம் உள்ளதா என, விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Natchimuthu Chithiraisamy
ஏப் 05, 2025 11:39

பிரச்சனைக்கும் வருமானத்திற்கும் சம்பந்தம் இல்லை


kumarkv
ஏப் 04, 2025 11:03

சந்தோசம் இல்லாம பண்ணிட்டயே சந்தோஷ்


Barakat Ali
ஏப் 04, 2025 09:16

தற்கொலை கூடாது ...... அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு ......


Raj
ஏப் 04, 2025 05:20

என்ன ஒரு அன்பான தம்பதிகள், ஏழு ஆண்டு கால சண்டையாம் ஆனால் மூன்று மாத கால கைக்குழந்தை. கொலை செய்வதற்கென இருவரும் குழந்தையை பெற்றார்களா? கேவலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை