உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் மின் கட்டணம் உயர்வு யூனிட்டுக்கு 20 பைசா அதிகரிப்பு

ஹரியானாவில் மின் கட்டணம் உயர்வு யூனிட்டுக்கு 20 பைசா அதிகரிப்பு

சண்டிகர்:ஹரியானா மாநிலத்தில் வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, ஹரியானா மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:வீடுகளுக்கான மின்சார கட்டணம் 20 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் 50 யூனிட் வரை ஒரு யூனிட் மின்சாரத்துக்கு இரண்டு ரூபாயாக இருந்த கட்டணம் 2 ரூபாய் 20 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, 51- முதல் 100 யூனிட் வரை 2 ரூபாய் 50 காசுகளாக இருந்த கட்டணம் 2 ரூபாய் 70 காசுகளாகவும், 100 யூனிட்டுக்கு மேல் 2 ரூபாய் 75- காசுகளாக இருந்த கட்டணம் 2 ரூபாய் 95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.ஹரியானாவில், 2020 - 20-21ம் நிதியாண்டில், 50 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் 70- காசுகளாக இருந்த மின் கட்டணம் இரண்டு ரூபாயாக குறைக்கப்பட்டது. அதேபோல, 51 முதல் 100 யூனிட் வரை 4 ரூபாய் 50- காசுகளாக இருந்த கட்டணம் 2 ரூபாய் 50 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

வணிகப் பிரிவு

வணிகப் பயன்பட்டுக்கான கட்டணம் 11 கிலோவாட் வினியோக பிரிவில், ஒரு யூனிட் 6 ருபாய் 65 காசுகளாக இருந்த கட்டணம் 6 ரூபாய் 95 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விவசாயிகளுக்கு மாதாந்திர குறைந்தபட்ச மின் கட்டணம் 200 ரூபாயில் இருந்து 180 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !