உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை; 5 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம்

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை; 5 பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலத்த காயமுற்றனர். கடந்த சில தினங்களாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகிறது. சமீபத்தில், கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் களத்தில் இறங்கி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ragzvxoz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார். 5 பாதுகாப்பு படை வீரர்கள் பலத்த காயமுற்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

R Kay
ஜூலை 27, 2024 15:15

பயங்கரவாதத்திற்கு சாமரம் வீசும் உள்ளூர் அரசியல்வியாதிகளையும் ஒடுக்க வேண்டும்.


V RAMASWAMY
ஜூலை 27, 2024 17:05

ஒதுக்கினால் மட்டும் போதாது, அவர்களை நாடு கடத்தவேண்டும் அல்லது பயங்ககரவாதிகளோடு இவர்களையும் ........


தமிழ்வேள்
ஜூலை 27, 2024 14:03

காங்கிரசுக்கு , கணிசமான அளவு எம் பிக்கள் கிடைத்தவுடன் , காஷ்மீர் ரணகளமாகிறது ..அமைதி விடைபெற்றுக்கொள்கிறது ....இப்படிப்பட்ட ஒரு பிரினைவாத கட்சி இந்த நாட்டுக்கு தேவையா ? மதியிழந்து காங்கிரசுக்கு ஓட்டுப்போட்டு வினையை தேடிக்கொண்ட இந்த ஜனங்களை வைத்துக்கொண்டு இந்த நாடு எப்படி முன்னேறும் ?


V Subramanian
ஜூலை 27, 2024 17:37

சரியான பதில் . சபாஷ்


தியாகு
ஜூலை 27, 2024 11:46

பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் அல்ல, பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனுக்கு என்ன மரியாதை வேண்டியிருக்கு?


rasaa
ஜூலை 27, 2024 13:16

மிகவும் சரி


Asirvatham k
ஜூலை 27, 2024 13:43

குட் கமெண்ட்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை