உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவன் படுகாயம் அடைந்துள்ளான். அப்பகுதியில், மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.முன்னதாக இன்று காலை, குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். இந்த ராணுவ நடவடிக்கைக்கு 'ஆப்பரேஷன் அகல்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

shakti
ஆக 02, 2025 18:11

அகல் அல்ல, அகால் ...


பேசும் தமிழன்
ஆக 02, 2025 17:36

நமது நாட்டின் உப்பை சாப்பிட்டு விட்டு பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த நாட்டில் இடமில்லை.... அவர்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்.... அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள் !!!


Tamilan
ஆக 02, 2025 17:12

ராணுவத்தை வைத்து அரசு நடத்தும் கண்துடைப்பு நாடகம்


N Sasikumar Yadhav
ஆக 02, 2025 18:01

உங்கள மாதிரியான மூர்க்கர்களுக்கு பயங்கரவாத இசுலாமியர்களை கொல்வது எரிச்சலாக இருக்கும்


vivek
ஆக 03, 2025 08:16

அந்த லிஸ்டில் நீயும் இருக்காய்... உஷாரா


பேசும் தமிழன்
ஆக 02, 2025 16:25

நல்லது..... ஸ்வீட் எடு கொண்டாடு.... ஜெய்ஹிந்த்.... வந்தே மாதரம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை