உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு: தடுத்த அதிகாரி மீது தாக்குதல்

கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு: தடுத்த அதிகாரி மீது தாக்குதல்

அமராவதி: ஆந்திராவில் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களைத் தடுக்க முயன்ற கோயில் அதிகாரி ரமா தேவி மீது நடத்திய தாக்குதலில் மயக்கமடைந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.தெலுங்கானாவின் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான புருஷோத்தபட்டினம் கிராமம், 2014 ஆம் ஆண்டு மாநிலம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆந்திராவிற்கு மாற்றப்பட்டது.ஆந்திர மாநிலம் பத்ராச்சலம் நகரத்தில் உள்ள ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோயிலின் உயர் அதிகாரியாக ரமா தேவி என்பவர் உள்ளார். இந்நிலையில் அந்த கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டனர். இது குறித்து அறிந்த கோயில் அதிகாரி ரமா தேவி மற்றும் ஊழியர்கள், கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோத கட்டுமானங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக புருஷோத்தபட்டினம் கிராமத்திற்கு சென்றனர்.அப்போது சிலர் ரமா தேவி மற்றும் ஊழியரை தாக்கினர். இதில் ரமா தேவி மயக்கம் அடைந்தார். மயக்கமடைந்த அவரை சிகிச்சைக்காக பத்ராச்சலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கோயில் ஊழியர் ஒருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தெலுங்கானா அறக்கட்டளை அமைச்சர் கோண்டா சுரேகா, இந்தத் தாக்குதலைக் கண்டித்து, கோயில் அதிகாரிகளுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் பொறுத்துக்கொள்ளப்படாது.நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் மீது தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படும், மதிப்புமிக்க கோயில் நிலங்கள் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினையில் தலையிட்டு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீர்வுகாண வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி