உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடை செய்யப்பட்ட அமைப்பான பி.எப்.ஐ.,யின் ரூ.67 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை பறிமுதல்

தடை செய்யப்பட்ட அமைப்பான பி.எப்.ஐ.,யின் ரூ.67 கோடி சொத்துக்கள்: அமலாக்கத்துறை பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பயங்கரவாத பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.67 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்பின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.பி.எப்.ஐ., அமைப்பு பயங்கரவாதத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பல்வேறு மாநிலங்களிலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு மாநிலங்களின் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., அமைப்பினர் சோதனைகள் நடத்தினர். இதையடுத்து, 2022ல் அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனப்படும் பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு பயங்கரவாத்துக்கு நிதி திரட்டியதாகவும், அந்த அமைப்புக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.தற்போது, பயங்கரவாத பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.67 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்பின் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின், ரூ. 67.03 கோடி மதிப்புள்ள 8 அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. இந்த சொத்துக்கள் பல்வேறு அறக்கட்டளைகள் மற்றும் அதன் அரசியல் முன்னணியான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) ஆகியவற்றின் பெயரில் இருந்தன. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் ரூ.129 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
நவ 09, 2025 06:49

தூக்கில் போடப்பட வேண்டியவர்களை உயிரோடு வைத்து காமடி செய்வது சகிக்கவில்லை. கம்முனிசம் கூட தடைசெய்யப்பட்ட வேண்டியதே. தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அழிக்க வேண்டும்.


மணிமுருகன்
நவ 09, 2025 00:00

வரவேற்கிறேன் இதேப் போல் அரசியல்வாதிகளின் ஊழல் கணக்குகளையும் முடக்கினால் நன்று


Pandi Muni
நவ 08, 2025 21:56

SDPI உன் கண்ணுலயே படலயா NIA?


முக்கிய வீடியோ