உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நான் நேர்மையற்றவன் எனில் என்னை தூக்கிலிடுங்கள்; பிரதமர் மோடி

நான் நேர்மையற்றவன் எனில் என்னை தூக்கிலிடுங்கள்; பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முந்தை காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை என்பது ஒரு பயனற்ற அமைப்பாக இருந்தது என பிரதமர் மோடி டி.வி. செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.ஏழு கட்ட லோக்சபா தேர்தலில் இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பா.ஜ., கூட்டணி 400 இடங்களுக்கு மேல் பெறும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.இந்நிலையில் இந்தியா டுடே செய்தி சேனலுக்கு பிரதமர் மோடி அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி,* மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைந்ததும் 100 நாள் திட்டம் என்பதை 125 நாள் திட்டம் கொண்டு வரப்படும். இதில் இளைஞர்களுக்காக 25 நாட்கள் ஒதுக்கப்படும் .* தேர்வு எழுதும் உங்கள் குழந்தை 100க்கு 99 மதிப்பெண் பெறுவதே இலக்காக கொண்டுள்ளதோ அது போன்றே இத்தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களை பெறுவதே எனது இலக்கும், கடமையும் ஆகும். எனவே ஒரு தலைவனாக நான் பொறுப்பேற்கிறேன்.*பா.ஜ. ஆட்சியில் எப்போதும் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகத்தான் செயல்பட்டு வருகிறது.* முந்தை காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை பயனற்ற அமைப்பாக இருந்தது. ஆனால் பா.ஜ.,ஆட்சியில் அமலாக்கத்துறை திறம் பட செயல்பட்டு வருகிறது.* பா.ஜ.வில் இணையும் அல்லது கூட்டணி வைக்கும் அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ,. வருமானவரித்துறை ஆகிய அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் எதிர்க்கட்சி தலைவர்களை மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. * கடந்த 2004- 2014 வரை 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை என்ன செய்து கொண்டிருந்தது. அவர்களுக்கு என்ன வேலை ? தற்போது அமலாக்கத்துறை தன் கடமையை செய்கிறது. * அமலாக்கத்துறையால் மீட்கப்பட்ட பணகுவியல்களை ஏழைகளுக்கு திருப்பிதர அரசு திட்டமிட்டுள்ளோம். * ஓரு தேசம், ஒரு தேர்தல் என்பது பா.ஜ.,வின் குறிக்கோள். இது நாட்டிற்கு மிகவும் அவசியமானது. * கடந்த 7 ஆண்டுகளி்ல் 6 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி பேர்கள் கடனுதவி பெற்றுள்ளனர்.* கடந்த 60 ஆண்டுகளாக தேர்தல் ஆணையம் ஒற்றை உறுப்பினர் அமைப்பாக இருந்தது. அதிலிருந்து வெளியே வந்த அதிகாரிகள் கவர்னர்களாக, எம்.பி.க்களாக , அத்வானிக்கு எதிராக போட்டியிட்டவர்களாக இருந்துள்ளனர்.*தேர்தலின் போது உலகம் முழுதும் உள்ள ஊடக நிறுவனங்களை இந்தியாவிற்கு அழைக்க வேண்டும். *நான் நேர்மையற்றவன் எனில் என்னை தூக்கிலிடுங்கள். எனது நாட்டில் செல்வத்தை உருவாக்குபவர்களை நான் மதிப்பேன்.குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ஆரூர் ரங்
மே 17, 2024 12:49

நெருங்கிய உறவினர்களைக் கூட பிரதமர் மாளிகைக்கு அழைப்பதில்லை. அரசு வரிப்பணத்தை குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வதில்லை. அயலுறவு பயணங்களில் RSB மீடியா ஆட்களை அழைத்துச் சென்று விருந்தளித்ததில்லை. இது போன்ற நேர்மையாளர் இவ்வளவு நாள் பதவியில் நீடித்திருப்பது அதிசயம். இன்னொரு நேர்மையாளர் மொரார்ஜி இரண்டாண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் விலகினார்.


விவசாயி
மே 17, 2024 10:12

சீரியஸாதானே போயிட்டுருக்கு பிரசாரம்!


venugopal s
மே 17, 2024 07:21

ஒருவரை ஒரு முறை தான் தூக்கிலிட முடியும், ஆயிரம் தடவை தூக்கிலிடப் பட வேண்டியவரையும் ஒரு தடவை தான் தூக்கிலிட முடியும்!


Anantharaman Srinivasan
மே 16, 2024 23:19

பிரதமராயிருக்கும் கடைசி நாள் வரை காங்கிரசை தூற்றுவதே வேலை இவர் அரசியல் மாமியார்


Francis
மே 16, 2024 23:18

மோடி அவர்களே கவலை வேண்டாம் ஜுன் -ம் தேதிக்குள் பிறகு இந்தியா கூட்டணி ஆட்சியில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியவற்றை மிகவும் சரியான முறையில் பயன்படுத்தப்படும் ரெய்டுகளுக்கு தயாராகிக் கொள்க


SESHADRI
மே 16, 2024 22:40

your government already given fifteen lakh to every citizen of India


venugopal s
மே 16, 2024 22:23

ஆமாம் அவர்களுக்கு உங்கள் அளவுக்கு விவரம் பத்தாது! அமலாக்கத்துறை,சிபிஐ, வருமான வரித்துறை,என் ஐ ஏ எதையுமே சரியாக உங்களைப் போல் பயன்படுத்தத் தெரியவில்லை!


A1Suresh
மே 16, 2024 22:21

வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு என்ற குறளுக்கு ஏற்ப ராணுவம் முதல் அமலாக்கப்பிரிவு வரை அனைவருக்கும் சுதந்திரமும், உற்சாகமும் தருகிறார் மோடிஜி


Priyan Vadanad
மே 16, 2024 21:57

போட்டோவில் முகம் கொஞ்சம் கலவரமாய் இருப்பது போல தெரிகிறது/ பயம் வேண்டாம் தலைவரே/ நீங்கள்தான் அடுத்த பிரதமர்/ க்கு மேல் இடம் ஏற்பாடு செய்தாகிவிட்டது/


Anantharaman Srinivasan
மே 16, 2024 23:21

அகத்தின் அழகு முகத்தில் தெரியுது


Priyan Vadanad
மே 16, 2024 21:54

படத்தில் பக்தி பழமாய் காட்சியளித்திருந்தால் எப்படி தோரணையாய் இருந்திருக்கும்?//


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை