ஹிந்து - முஸ்லிம்கள் ஒற்றுமை காங்., நிலைப்பாடு பற்றி ஈஸ்வரப்பா
பெலகாவி: ''அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்று விரும்பும் நேரத்தில், காங்கிரசும், சித்தராமையாவும் ஹிந்து - முஸ்லிமகள் இடையே ஒற்றுமை ஏற்படக்கூடாது என விரும்புகின்றனர்,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:முஸ்லிம்களே 'முத்தலாக்' ஒழிப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், காங்கிரஸ் ஏற்க தயாராக இல்லை. ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பிரிந்து செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் நசுக்கப்பட்டது. பட்டியல் ஜாதியினர், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் கட்சியை கைவிட்டன. எனவே சிறுபான்மையினரின் ஓட்டுகளை கவரும் வகையில் திருப்திபடுத்தும் அரசியல் செய்து வருகிறார்.அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்று விரும்பும் நேரத்தில், காங்கிரசும், சித்தராமையாவும் ஹிந்து - முஸ்லிமகள் இடையே ஒற்றுமை ஏற்படக்கூடாது என விரும்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.