உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஈரானில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம்

ஈரானில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக நம் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே, கடந்த சில நாட்களாக மோதல் நடக்கிறது. இரு தரப்பும் ஏவுகணைகளை வீசி வருவதால் பதற்றம் நீடிக்கிறது. ஈரானில் உள்ள பல்கலைகளில், நம் நாட்டை சேர்ந்த, 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இஸ்ரேல் - ஈரான் மோதலால், இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஏராளமான இந்திய மாணவர்கள், நம் துாதரகத்தின் உதவியால் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக நம் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதில், 110 பேர் அர்மேனியா நாட்டின் எல்லை வழியாக வெளியேறியதாகவும், அவர்களுடன் துாதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, டெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் உடனடியாக அந்நகரத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இஸ்ரேல் - ஈரான் மோதலை கருதி, டெஹ்ரானில் உள்ள நம் துாதரகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் அவசர கட்டுப்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது. மேலும், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

KavikumarRam
ஜூன் 18, 2025 14:50

எல்லாம் முடிஞ்சவுடனே நாங்க தான் இந்த மாணவர்களை வெளியேத்தினோம்னு ஊளையிடுவாரு.


Kulandai kannan
ஜூன் 18, 2025 13:10

ஸ்டாலின்-கருணாஸ் பேரணி உண்டா?


சிந்தனை
ஜூன் 18, 2025 09:20

இனிமேல் சும்மாஸ்கார் அவர்களின் நாட்டுக்கு வேலைக்கு போவதும் நல்லது கிடையாது இனிமேல் அவர்களின் பிரச்சினை வளர்ந்து கொண்டுதான் இருக்கும் குண்டு மழையும் பொழிந்து கொண்டுதான் இருக்கும்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 18, 2025 07:10

உக்ரேனிலிருந்து தமிழ் மாணவர்களை பத்திரமாக மீட்ட தமிழக முதல்வர் ..இப்பொழுதும் தன் அயலுறவு செல்வாக்கை பயன்படுத்தி இந்தியர்களை பத்திரமாக மீட்ப்பார் ...கழகத்தின் அயலக அணிசெயலாளர்கள் முடுக்கிவிடப்பட்டு விட்டார்கள்


SUBBU,MADURAI
ஜூன் 18, 2025 06:05

Pakistan called its nukes 'Islamic bomb' for this day. When enemies of Islam are attacking a Muslim country, Pakistan making sure Muslims get no help. Sunni Pakistan hasnt just backstabbed Shia Iran. It has also betrayed trust of 40 Million Shia Muslims living in Pakistan. Shias wont trust Pakistan ever again.


SUBBU,MADURAI
ஜூன் 18, 2025 05:59

On a different note, what exactly did some Indian students study in Iran? Studying in the USA, UK, or Germany is understandable, but why do they go to countries like Pakistan or Iran? Is it for religious reasons, since most of them are Muslims?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை