உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிஜ்பூஷண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய ஆதாரம் உள்ளது: நீதிமன்றம்

பிரிஜ்பூஷண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய ஆதாரம் உள்ளது: நீதிமன்றம்

புதுடில்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பா.ஜ., எம்.பி., பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு தேவையான ஆதாரம் உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக 10 ஆண்டுகள் இருந்தவர் பா.ஜ., எம்.பி., பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் மீது முன்னணி மல்யுத்த வீராங்கனையர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனையடுத்து மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷண் சிங் விலகினார். இக்குற்றச்சாட்டு காரணமாக, அவருக்கு பதிலாக அவரது மகன் கரண் பூஷணுக்கு கைசர்கஞ்ச் தொகுதியில் இம்முறை வாய்ப்பு அளித்துள்ளது.மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் காரணமாக, அவர் பிரிஜ்பூஷண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரிஜ் பூஷண் கோரிக்கையை டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நிராகரித்ததுடன், அவர் மீதான வழக்கில் இன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவும் உத்தரவிட்டு இருந்தது.இந்நிலையில், பிரிஜ்பூஷண் மீது 5 மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், 354 மற்றும் 354 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது. 6வது வீராங்கனை அளித்த குற்றச்சாட்டில் இருந்து பிரிஜ்பூஷணை விடுவிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kanns
மே 11, 2024 08:47

Beyond Politics Sack & Punish Case Hungry Criminals Not Punishing Vested False Complainant Gangsters esp Women, unions, SCs, advocates etc


Azar Mufeen
மே 11, 2024 03:20

அதெப்புட்றா ஒரு காமுகனுக்கு இப்படியா முட்டுக்கொடுக்கிறது


தாமரை மலர்கிறது
மே 10, 2024 19:10

பிரிஜ் பூஷன் சிறந்த தேசப்பற்றாளர் நாட்டிற்காக உயிரை கொடுக்கவும் துணிபவர் பல வீராங்கனைகளை சாதுரியத்தால் பதக்கங்கள் ஜெயிக்க வைத்து இந்தியாவின் பெருமையை உலகில் உயர்த்தியவர் நாற்பதுக்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களை நடத்தி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அறிவுக்கண் ஊட்டுபவர் இவர் இருக்கும் மாவட்டங்களில் ஆறு எம்பிகளை ஜெயிக்க வைத்தவர் அதனால் தான் காங்கிரஸ் க்கு இவரின் மீது கண் உறுத்துகிறது இவர் மீது அபாண்ட குற்றச்சாட்டை சுமத்தி இவரை உள்ளே தூக்கி போட்டால், ஆறு எம்பிகளை எளிதாக ஜெயித்துவிடலாம் என்ற அரசியல் சித்து விளையாட்டை காங்கிரஸ் நடத்துகிறது


Rajathi Rajan
மே 10, 2024 20:52

உன் வீட்டு வீராங்கனைகளை பிரிஜ் பூஷன் பார்க்க சொல்லு, அவனை பார்த்த பின்னால் நீ சொல்லும் இந்த கருத்தை உன் வீட்டு வீராங்கனைகள் வந்து இங்கு சொல்லட்டும், நாங்க நம்புறோம்


ES
மே 10, 2024 22:39

You are a disgrace for posting this. Do you have any shame??


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை