கலால் வரிக்கொள்கை ஜூன் வரை நீட்டிப்பு
விக்ரம்நகர்:புதிய கலால் கொள்கை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், பழைய வரிக்கொள்கையை வரும் ஜூன் வரை மேலும் மூன்று மாதங்களுக்கு பா.ஜ., அரசு நீட்டித்துள்ளது.கலால் துறை வெளியிட்ட அறிக்கை:புதிய கலால் கொள்கை குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் 2024 - 25ம் ஆண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மது ரகங்களை விற்பனை செய்வதற்கான தற்போதைய உரிமதாரர்களின் உரிமங்கள் வரும் ஜூன் 30ம் தேதி வரை செல்லபடியாகும்.இந்த காலத்திற்கான உரிமத்தை நீட்டிக்க விரும்பும் உரிமதாரர்கள், இந்த காலகட்டத்திற்கான கட்டணத்தை டிபாசிட் செய்ய வேண்டும்.முன்னதாக பழைய கலால் கொள்கை கடந்த செப்டம்பரில் மார்ச் வரை ஆறு மாதங்கள் நீட்டிக்கப்பட்டிருந்தது. புதிய கொள்கை தயாரிக்கப்பட்டு, வரைவு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதுகுறித்து அரசு முடிவெடுக்கும் வரையில் இடைக்காலமாக பழைய கொள்கை அமலில் இருக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.