உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் செல்கிறார் ஜெய்சங்கர்; என்ன விஷயம்னு தெரியுமா!

பாகிஸ்தான் செல்கிறார் ஜெய்சங்கர்; என்ன விஷயம்னு தெரியுமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு , பாகிஸ்தானுக்கு பயணிக்க உள்ளது.ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக இந்த மாநாட்டில் ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமர்கள் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியா சார்பில் வெளியுறவு அல்லது பாதுகாப்புத்துறை அமைச்சரே கடந்த காலங்களில் பங்கேற்று இருந்தனர். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பங்கேற்று இருந்தார்.இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ள உள்ளார். அக்., 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அவர், பாகிஸ்தானில் தங்கியிருக்க உள்ளார்.இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பிரச்னை உள்ள நிலையில் ஜெய்சங்கர் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

vijayraj mossay
அக் 08, 2024 19:31

பயங்கிரவாதி யே...சுயநலவாதிகள் தான்..அரசியல் வாதி...ஆட்சி அதிகாரம்..செல்வாக்கு... உங்கள் பொது நலம் வெளிவரும் ஒரு நாள். ..


LOGANATHAN THAMBYIAH
அக் 05, 2024 18:35

ஆனால் காங்கிரஸ் துரோகிகல் ராகுல் கானுடன் இருக்கிறானுங்களே


kamalakannan.s Kannan
அக் 05, 2024 15:32

Request to Mr. Jaishankar. All the best and be cautious.


V. Nagasubramanian
அக் 04, 2024 17:27

லால் பகதூர் சாஸ்திரியை ஞாபகம் வைத்து கொண்டு ரொம்ப கவனமா இருக்கணும்


Barakat Ali
அக் 04, 2024 18:13

இப்போது நேரு இந்திரா காந்தி ஆகியோர் இல்லையே ????


Rojan
அக் 04, 2024 23:11

எச்சரிக்கையா இருக்க வேண்டியது பாகிஸ்தான்தான் ... இது நேரு காந்தி கால பழைய இந்தியா இல்ல. நேதாஜி பட்டேல் கால புது இந்தியா ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை