உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலிவுட் நடிகர் தாக்குதல் வழக்கில் குற்றவாளி இவர் தான்; மும்பை போலீசார் திட்டவட்டம்

பாலிவுட் நடிகர் தாக்குதல் வழக்கில் குற்றவாளி இவர் தான்; மும்பை போலீசார் திட்டவட்டம்

மும்பை: பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷரிபுல் தான் குற்றவாளி. சி.சி.டி.வி., காட்சி ஆதாரங்கள் உள்ளன என மும்பை போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாந்த்ராவில், 'சத்குரு ஷரண்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பாலிவுட் நடிகர் சயீப் அலிகான், 54, வசித்து வருகிறார். நடிகர் சயீப் அலிகான் வீட்டுக்குள், கடந்த ஜனவரி 16ம் தேதி அதிகாலை மர்ம நபர் புகுந்து, கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சயீப் அலிகான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசாரணையில், ஷரிபுல் இஸ்லாம், நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், வேறொரு பெயரில் நம் நாட்டில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததும், திருடுவதற்காக நடிகர் சயீப் வீட்டுக்குள் அவர் சென்றதும் தெரிய வந்தது. சம்பவத்தன்று நடிகர் சயீப் அலி கான் வீட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகை தரவுகளுடன், கைதான ஷரிபுல் இஸ்லாமின் கைரேகை பொருந்திப் போகிறதா என்பதை ஆய்வு செய்ய, அவரது கைரேகை மாதிரிகள், மாநில சி.ஐ.டி., போலீசாருக்கு அனுப்பப்பட்டன. இதற்கிடையே கைரேகை ஒத்துபோகவில்லை என தகவல்கள் பரவியது.ஷரிபுல் கைது செய்யப்பட்ட பிறகு, வங்க தேசத்தில் உள்ள அவரது தந்தை, 'சி.சி.டி.வி., காட்சிகளில் காணப்பட்ட நபர் தனது மகன் அல்ல. அவர் மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது' என்றார். பல வதந்திகளுக்கு மத்தியில் செய்தியாளர் கூட்டத்தில், மூத்த மும்பை போலீஸ் அதிகாரி பரம்ஜித் தஹியா கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள வங்கதேச நாட்டவருக்கு எதிராக தங்களிடம் போதுமான மற்றும் வலுவான ஆதாரங்கள் இருக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள ஷரிபுல் தான் குற்றவாளி என்றார். மேலும் அவர், ஷரிபுல் கை ரேகைகள் ஒத்துபோகவில்லை என்ற கருத்தை நிராகரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

MARUTHU PANDIAR
ஜன 31, 2025 22:20

இரண்டு பார்டிங்களும் "மர்ம நபர்" ஹை+++எங்கயோ எதுவோ நடக்கறத்துக்கு இது முன்னோட்டம்னும் பேசிக்கறாங்க.ஒரே "மர்மம் தான் போங்க.


Karthik
ஜன 31, 2025 19:45

மறுபடியும் முதல்ல இருந்தா??


என்றும் இந்தியன்
ஜன 31, 2025 17:36

கத்தி குத்தாம் எலும்பு உடைந்ததாம் ஆட்டோவில் பையன் கூட்டிச்சென்றானாம் தீவிர சிகிச்சையாம் ரூ 36 லட்சம் செலவாம் மனைவி அந்த இரவில் வீட்டில் இல்லையாம். வேலைக்காரியை குத்த வந்தானாம் இவர் தடுத்தாராம். 1 கத்திக்குத்து என்றால் ரத்தம் நிற்காமல் ஆட்டோ பூராவும் ரத்தக்கறை படிந்திருக்கும் 2 காரில் கொண்டு செல்லமுடியாதா???பைய்யனாருக்கு ஓட்டத்தெரியாதா 3 மனைவி எங்கே அந்த நடு இரவில்???மேலே பார்ட்டியா???3 எலும்பு உடைந்தால் ஒரு சின்ன கட்டு போடுவார்கள் அப்படித்தானே???4 ரூ 36 லட்சம் மருத்துவ செலவு 5 வேலைக்காரி இவரது ரூமில் நடு இரவில், ஆனால் மனைவி அங்கே இல்லை . உங்க வழக்கும் திருப்பங்களும் சரியான ஜோக்


kalyan
ஜன 31, 2025 14:23

இந்த கத்திக்குத்தே ஒரு பெரிய நாடகம் என்கிறது பல ஊடகங்கள்.


புதிய வீடியோ