உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகள் போராட்டம்; பஞ்சாபில் பிப்ரவரி 24 வரை இணைய சேவைகள் நிறுத்தம்

விவசாயிகள் போராட்டம்; பஞ்சாபில் பிப்ரவரி 24 வரை இணைய சேவைகள் நிறுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு, பஞ்சாபில் பாட்டியாலா, சங்குரூர் மற்றும் பதேகர் சாஹிப் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் பிப்.,24ம் தேதி வரை இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முற்றுகை போராட்டத்தை, பஞ்சாப், ஹரியானா, உ.பி., ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நடத்தி வருகின்றனர். டில்லியின் எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளதால், ஹரியானா உடனான பஞ்சாபின் எல்லைகளான ஷம்பு மற்றும் காநவுரி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா, சங்குரூர் மற்றும் பதேகர் சாஹிப் உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் இணைய சேவைகள் இடைநிறுத்தம் பிப்ரவரி 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹரியானா அரசு அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், பதேஹாபாத் மற்றும் சிர்சா மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகள் மற்றும் மொத்த எஸ்எம்எஸ் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

shyamnats
பிப் 19, 2024 11:10

விவசாயிகள் என்றால் யார் யார் என்பதை விரைவில் மத்திய அரசு அடையாளப்படுத்த வேண்டும். விவசாய வேலை செய்பவர்கள், குறைந்த அளவிலான ஏக்கர் விவசாயம் செய்பவர்கள், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில், பெரும் கார்பொரேட்கள் போல செயல் படுபவர்கள், மற்றும் விவசாய விளை பொருட்களில் அதிக லாபம் காணும் இடைத்தரகர்கள் இவர்களை பகுத்தறிந்து அவர்களை வரைமுறை படுத்தவேண்டும். இப்போதைய போராட்டமே, உண்மையான விவசாயிகளால் அல்லாமல் மற்றவர்களால், அரசியல் கட்சிகள், ஆதரவோடு நடத்த படுவதாகவே தோன்றுகிறது. மக்கள் நலன் பாத்து காக்க படவேண்டும்.


J.V. Iyer
பிப் 19, 2024 05:59

இந்த பஞ்சாப் பணக்கார முதலைகளை ஒன்றும் செய்யமுடியாதா? தேசவிரோதிகள்.


Arachi
பிப் 18, 2024 22:01

அரசின் கோழைத்தனம்.பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு வக்கில்லை


தாமரை மலர்கிறது
பிப் 18, 2024 21:33

காலிஸ்தான் தீவிரவாதிகள் ஒழுங்காக மூட்டையை கட்டிக்கொண்டு, அவர்கள் மாநிலத்திற்கு இருபத்திநாலு மணிநேரத்திற்குள் செல்ல வேண்டும். அப்படியில்லையெனில் கடும் விளைவை சந்திக்க நேரிடும். அரசு மென்மையாக நடக்க நடக்க, தீவிரவாதிகள் திமிர் பிடித்து ஆடுவார்கள்.இந்தியாவில் கூட்டம் ஜாஸ்தி. அதற்கேற்றவாறு கடுமையான செயல்பாடுகள் அவசியம். மயிலிறகு கொள்கைகள் வேலைக்கு ஆகாது. ட்ரான்களை வைத்து, பெல்லெட் குண்டுகள் அடித்து இருபத்திநாலுமணிநேரமும் கண்காணிக்க வேண்டும். தண்ணீர் அடித்தல், கண்ணீர்ப்புகை குண்டுகள் வேஸ்ட். ஒரு வாரத்தில், அனைவரையும் அடித்து விரட்டிவிடுவது, சட்டஒழுங்கிற்கு நல்லது.


Visu
பிப் 18, 2024 19:44

விவசாயியா இடைதரகர்களா


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை