உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகள் நலமாக இருப்பதை உறுதி செய்யணும்: மத்திய அமைச்சர் சவுகான் திட்டவட்டம்

விவசாயிகள் நலமாக இருப்பதை உறுதி செய்யணும்: மத்திய அமைச்சர் சவுகான் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விவசாயிகள் நலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: தற்போது நமது நாடு வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியா மிகவும் பழமையான நாடு ஆகும். இதை நாம் அனைவரும் அறிவோம். நான் ஒரு இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மரக்கன்றுகள் நட வேண்டும். மரங்கள் இயற்கையின் உயிர்நாடி, அவை நம் வாழ்வின் பாதுகாவலர்களாகவும் உள்ளன.

இரவும், பகலும்!

மரங்களை நடுவதன் மூலம் பூமியை பசுமையாகவும் செழிப்பாகவும் மாற்ற வழி வகுக்கும். விவசாயத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகள் நலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிரதமரின் தொலைநோக்கு பார்வை தான் எங்களின் நோக்கம். நான் விவசாய அமைச்சரான நாள் முதல், அதை எப்படிச் சிறப்பாகச் செய்வது என்று இரவும், பகலும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் சிவராஜ் சவுகான் மரக்கன்று ஒன்றை நட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

J.Isaac
ஜூன் 23, 2024 20:44

வைபம் முறைகேட்டில் கிட்டத்தட்ட 40 சாட்சிகளை கொன்ற திறமைசாலி


Sundar R
ஜூன் 22, 2024 17:28

பெருமதிப்புக்குரிய திரு. சிவராஜ் சௌஹான் அவர்களைப் பற்றி எந்த பத்திரிகைகளில் செய்தி வந்தாலும் அன்று என் முழுவதும் மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கிறது. பாரதத்திலேயே தூய்மையான ஊராக முதலிடத்தில் பல ஆண்டுகளாக இந்தூரை தாங்கள் வைத்திருப்பதே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.


மணியன்
ஜூன் 22, 2024 15:17

மத்திய பிரதேச மாநிலத்தில் 18 ஆண்டுகள் முதல்வராக இருந்து நோயாளி மாநிலங்களில் பட்டியலிலிருந்து விவசாயத்தில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றி கடந்த சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவுஅலையில் ஐந்தாவது முறையாக மூன்றில் இரண்டுபங்கு வெற்றியையும்,பாராளுமன்ற தேர்தலில் ம.பி யில் பாஜக அனைத்துதொகுதிகளிலும் வெற்றியையும் பெற்றுக்கொடுத்த மாபெரும் பாஜக தலைவர் சிராஜ்சிங் சௌஹான் .இவரது திறமை காரணமாக பிரதமர் இவருக்கு மத்திய அரசில் மிக முக்கியமான விவசாயத்துறையை வழங்கியுள்ளார்.


கமலேஷ்
ஜூன் 22, 2024 15:11

பத்துவருஷமா செய்யாததையா நீங்க செஞ்சுடப்.போறீங்க?


hari
ஜூன் 22, 2024 21:05

ஒரு பத்து நாள் டாஸ்மாக் போகாம இருக்கமுடியுமா. உன்னால??


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை