உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி

மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, 87, உடல்நலக்குறைவு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது வயிற்றில் தொற்று ஏற்பட்டது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !