ஜம்மு: பயங்கரவாத தாக்குதல்களை நடத்துபவர்களை கொல்லாமல் அவர்களை பிடித்து விசாரிக்க வேண்டும் என காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.காஷ்மீரில் அடுத்தடுத்து பயங்கரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதில், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். சிலர் காயமடைந்தனர். நேற்று புத்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உ.பி.,யைச் சேர்ந்த இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0mntcrpi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக பரூக் அப்துல்லா நிருபர்களை சந்தித்த போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.பதில்
இதற்கு அவர் அளித்த பதில்: இது போன்ற கேள்விக்கே இடமில்லை. புதிய அரசு அமைந்ததும், தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். புதிய அரசை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி நடக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. பயங்கரவாதிகளை கைது செய்தால், அவர்கள் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தெரியவரும். அவர்களை கொல்லக் கூடாது. அவர்களை பிடித்து, பின்னணியில் யார் உள்ளனர் என்பது பற்றி விசாரிக்க வேண்டும். உமர் அப்துல்லா அரசை கவிழ்க்க சதி நடக்கிறதா என்பது குறித்தும் அவர்களிடம் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.ஆதரவு
பரூக் அப்துல்லாவின் கருத்துக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறியதாவது: பரூக் அப்துல்லா மூத்த அரசியல்வாதி. காஷ்மீர் மக்களுக்காக பணியாற்றி உள்ளார். அவரின் நேர்மை பற்றி எவ்வித சந்தேகம் கிடையாது. இவ்வளவு பெரிய மூத்த அரசியல்வாதி கூறும் குற்றச்சாட்டை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.எதிர்ப்பு
பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவாலா கூறியதாவது: தனது பொறுப்பில் இருந்து நழுவுவதற்காக இந்திய ராணுவம் மற்றும் அமைப்புகள் மீது பரூக் அப்துல்லா குற்றம்சாட்டுகிறார். நாட்டின் நலனுக்கு முக்கியம் அளிக்க வேண்டிய தீவிரமான விஷயத்தை வைத்து சிலர் ஓட்டு வங்கி மற்றும் குடும்ப அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அவர் கூறினார்.