உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விரைவாக பணம் செலுத்தும் வசதி; இந்தியாவின் யு.பி.ஐ., உலக அளவில் முதலிடம்: ஐ.எம்.எப்., பாராட்டு

விரைவாக பணம் செலுத்தும் வசதி; இந்தியாவின் யு.பி.ஐ., உலக அளவில் முதலிடம்: ஐ.எம்.எப்., பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விரைவாக பணம் செலுத்துவதில் உலக அளவில் இந்தியாவின் யு.பி.ஐ., முதலிடம் வகிப்பதாக ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் எனப்படும் யு.பி.ஐ., இந்தியாவில் வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடி பணப் பரிமாற்றங்களை செய்ய உதவும் ஒரு அமைப்பாக உள்ளது. இதன்படி, ஒரு மொபைல் செயலி மூலம் பல வங்கிக் கணக்குகளை இணைத்து, பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்கும் ஒரு எளிய வழியை வழங்குகிறது. யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவையாகவும் உள்ளன.இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (என்.பி.சி.ஐ.,) 2016ல் தொடங்கப்பட்ட யு.பி.ஐ., வசதி, பயனர்கள் பல வங்கிக் கணக்குகளை ஒரே செயலியுடன் இணைத்து உடனடியாக பணத்தை மாற்ற அனுமதிக்கிறது. இது, 24 மணி நேரமும் அணுகக்கூடிய தன்மையில் உள்ளது.சர்வதேச நாணய நிதியம் கூறியிருப்பதாவது:உடனடி பணப்பரிமாற்றங்களை செய்து வரும் யு.பி.ஐ., தற்போது உலகளவில் 50 சதவீத பரிவர்த்தனைகளை கொண்டுள்ளது. ஏனென்றால் இதன் வேகம் மற்றும் எளிமைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.இதன் மூலம் மாதம் தோறும் 1,800 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை கையாள முடிகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.24.03 லட்சம் கோடி மதிப்புள்ள பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது பரிவர்த்தனை அளவு 32 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
ஜூலை 21, 2025 08:23

டீக்கடை, சோமாஸ் கடை ஆளுங்களுக்கெல்லாம் லட்சக்கணக்கில் வரி கட்டுமாறு நோட்டீஸ் வர்ரது ஐ.எம்.எஃப் ஆளுங்களுக்கு தெரியுமா? பெங்களூர்ல இப்போ நிறைய கடைகளில் கேஷ் கேகுறாங்களாம்.


theruvasagan
ஜூலை 20, 2025 22:00

எந்த இடத்திலிருந்தும் மொபைல் செயலி மூலம் பணப் பரிவர்த்தனை சுலபமாக விரைவாக பாதுகாப்பாக செய்யும் வசதி உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அதிகம் படிக்காத சாமானிய மக்களும் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம் மோடி அரசின் மாபெரும் சாதனை.


SUBBU,MADURAI
ஜூலை 20, 2025 22:38

இந்தியாவில் UPI மூலம் ஒரு நிமிடத்திற்கு நான்கு லட்சம் பணப் பரிவர்த்தனைகள் நடக்கின்றன என்பது இந்தியர்களான நமக்கு பெருமைதானே!


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 20, 2025 19:50

ப சிதம்பரம் யு பி ஐ க்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொன்னவராச்சே ?? அவரால முடியாதுங்கிறதைத்தான் அப்படிச்சொன்னாரா ??


ஆரூர் ரங்
ஜூலை 20, 2025 19:38

மின்வசதி கூட சரியாக இல்லாத இந்தியாவில் டிஜிட்டல் நிதிச் சேவை சாத்தியமே இல்லை என்று பார்லிமெண்டில் எதிர்க்குரல் எழுப்பிய பசிக்கு சமர்ப்பணம்.


SUBBU,MADURAI
ஜூலை 20, 2025 19:20

India do 4 lakh TRANSACTIONS Per minute on UPI.


GMM
ஜூலை 20, 2025 19:15

UPI சில்லறை தட்டுப்பாட்டை குறைத்து விட்டது. BSNL sim சிக்னல் கிடைப்பது கடினம். அதனை மேன்படுத்த வேண்டும். sms, voice, data விலை ratio வில் நிர்ணயிக்க வேண்டும். Satellite முறைக்கு bsnl மாற வேண்டும். அரசு அதிகாரிகள் upi மற்றும் bsnl கட்டாயம் பயன்படுத்த வேண்டும். பண பரிவர்த்தனை மூலம் கல்வி, மருத்துவ, வழக்கறிஞர் சேவை கட்டணம் தடை விதிக்க வேண்டும்.


vns
ஜூலை 20, 2025 18:55

நிதித்துறை LKG, பி சிதம்பரம் இந்த செய்தியைப் படித்தாரா ?


Yaro Oruvan
ஜூலை 20, 2025 19:22

அப்புச்சி இதையெல்லாம் படிக்க மாட்டாரு.. ஆக்ஸ்போர்ட் எஜுகேட்டேட் நல்ல வேளை நாடு தப்பித்தது கான்+கிராஸ் கும்பலிடமிருந்து


பெரிய குத்தூசி
ஜூலை 20, 2025 18:44

இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் UPI உலகளாவிய நிதிசேவை அமெரிக்கா நிறுவனமான விசா மற்றும் mastercard நிறுவனங்களை விட அதிக தினசரி நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டு சாதனை படைத்து வருகிறது. இந்தியாவின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வேண்டுமானால் முதலில் இந்த விசா , மாஸ்டர் கார்டு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் NEFT அமெரிக்கா சிஸ்டம் கீழ் இயங்கும் பணபரிமாற்ற டிஜிட்டல் சிஸ்டம் சேவை இந்தியாவுக்கு கிடைக்காமல் ஆப் செய்வார்கள். ஆனால் மோடி அரசு வந்தவுடன் UPI எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை இந்தியாவிற்கு என்று தனித்துவமாக தயார் செய்து தன்னிறைவு அடைய செய்துள்ளார். அமெரிக்கா பொருளாதார தடைகள் வந்தாலும் இந்தியாவை ஒன்றும் செய்யமுடியாது. இந்த அறுமைகள் எங்கே குவாட்டருக்கும் ருபாய் 200 க்கும் அடிமையாய் கிடைக்கும் டுமிழனுக்கு தெரியப்போகிறது.


Kulandai kannan
ஜூலை 20, 2025 18:16

ஆனால் இந்த வசதியை அனுபவிப்பதற்கு ஒரு நயா பைசா வசூலித்தாலும் நாங்கள் வானத்துக்கும், பூமிக்கும் துள்ளிக் குதித்து போராடுவோம்.