உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நள்ளிரவு பயணத்தால் கோர விபத்து; மினி லாரி - கனரக சரக்கு வாகனம் மோதியதில் 14 பேர் பரிதாப பலி

நள்ளிரவு பயணத்தால் கோர விபத்து; மினி லாரி - கனரக சரக்கு வாகனம் மோதியதில் 14 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நள்ளிரவில் மினி லாரி - கனரக சரக்கு வாகனம் மோதியதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர்-பலோடா பஜார் சாலையில் உள்ள சரகான் அருகே பனார்சி கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மினி லாரியில், வீடு திரும்பி கொண்டு இருந்தனர். மினி லாரியில் 50 பேர் சென்று கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த கனரக சரக்கு வாகனம் மோதியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் பயணிப்பது மிகவும் ஆபத்தானது. வாகனம் ஓட்டும் டிரைவர் சற்றே கண் அசந்தாலும் விபத்து நேரிடும் வாய்ப்புகள் அதிகம். இந்த சம்பவமும் அப்படித்தான் நேரிட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
மே 12, 2025 13:40

கதிசக்தி ராப்பகலா...


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 12, 2025 10:35

அதென்ன நள்ளிரவு பயணத்தால்? இரவு பகல் இருபத்திநாலு மணிநேரமும் தரை வான் மற்றும் கடற்பயணங்களும் உலகெங்கிலும் நடந்து கொண்டுதான் உள்ளது. "ACCIDENTS DO NOT HAPPEN THEY ARE CAUSED." திருச்சி ரயில்வே பாதுகாப்பு பள்ளியின் முகப்பிலுள்ள வாசகம் இது. நிறைய ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் முறையான பயிற்சியளித்து பின்னரே ஓட்டுநர் உரிமம் தர வேண்டும். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.


Kasimani Baskaran
மே 12, 2025 07:10

குடித்து விட்டு ஓட்டுவது - அல்லது வாகனம் ஓட்டும் பொழுது செல் போன் உபயோகிப்பது போன்ற நடவடிக்கைகள் கவனச்சிதறலுக்கு வழிவகுக்கும். ஓட்டுனர்கள் தங்களது கையில் பலரது உயிர் இருப்பதை புரிந்துகொண்ட பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.


புதிய வீடியோ