உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக தேர்தல் நெருங்குவதால் அச்சம்: டில்லிக்கு பறக்க துடிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்!

தமிழக தேர்தல் நெருங்குவதால் அச்சம்: டில்லிக்கு பறக்க துடிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் குறிப்பாக தமிழக அதிகாரிகள் மத்தியில் ஒரு சில விஷயங்கள் குறித்து பரபரப்பாக அலசப்படுகிறது. அடுத்து யார் ஆட்சி அமைப்பர், திமுக ஆட்சி அமைக்காவிட்டால் தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளுக்கு என்ன ஆகும் என பல விவகாரங்கள் விவாதிக்கப்படுகின்றன.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வட்டாரங்களில் ஒரு குறிப்பிட்ட தமிழக அதிகாரி குறித்து பேசப்படும் விஷயம் இதுதான். அந்த அதிகாரி டில்லியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். பின், தமிழகத்திற்கு மாறுதலில் சென்று விட்டார். இந்த அதி காரி ஏறக்குறைய தி.மு.க..வின் செய்தி தொடர்பாளராகவே மாறிவிட்டார் என சொல்கின்றனர்.தி.மு.க., தோல்வி அடைந்தால், தான் பந்தாடப் படுவதோடு, அடுத்த வரும் அரசு தன்னை வாட்டி வதைக்கும் என்பதை அந்த அதிகாரி நன்றாக உணர்ந்துள்ளாராம்.எனவே, டிசம்பர் மாதத்திற்குள் டில்லிக்கு மாறுதலாகி வந்துவிட வேண்டும் என காய்களை நகர்த்தி வருகிறாராம் அந்த அதிகாரி. ஆனால், முதல்வர் இதற்கு சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறி.இந்த அதிகாரி மட்டுமல்லாமல் வேறு சில அதிகாரிகளும், டில்லி சென்றுவிட வேண்டும் என்ற முடிவில் உள்ளனர். முதல்வருக்கு மிகவும் நெருக்கமான ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒரு வர், தலைமை செயலர் பதவிக்கு வர முயற்சிகள் செய்து வருகிறாராம். அவர், விரைவில் தலைமை செயலராகி விடுவார் என்கின்றனர்.இவர் தலைமையில் சட்டசபை தேர்தலைச் சந்திக்க முதல்வர் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், இந்த அதிகாரியின் சீனியர் இருவர் டில்லி வர துடிக்கின்றனர். ஆனால், மூன்று அதிகாரிகளையும் டில்லிக்கு அனுப்ப தமிழக அரசு அனுமதி அளிக்குமா, அதற்கு மத்திய அரசு சம்ம திக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

muthukrishna naidu jeyachandhiran
அக் 07, 2025 06:28

மக்களோடு தொடர்பு உடையவர்கள் கலெக்டர்கள் மட்டுமே.ஆனால்பெரும்பாலும் கலெக்டர்கள் கன்பேர்ட் ஐஏஸ்களைமட்டுமே த.நா. பயன்படுத்தும் காரணம் வயதானவர்கள் சொல்வதை கேட்பார்கள் என்று. ஆனால் சமீபத்தில் இளம்பெண் அதிகாரிகளை கலெக்டர் பதவியில் நிரூபிக்கிறது. இந்த மூனு அதிகாரிகள் டில்லி செல்ல விருப்ப படுவது வேற ஏதாவது காரணமாக இருக்கும்.


KRISHNAKUMAR
அக் 06, 2025 06:19

அமுதா ஐஏஸ்


ராமகிருஷ்ணன்
அக் 05, 2025 13:49

கூட்டுகளவாணிகளுக்குள் பயம், சண்டை, அடிதடி வருவது இயல்பு.


பெரிய குத்தூசி
அக் 05, 2025 13:14

பவர் உள்ள போஸ்ட் கிடைப்பது சந்தேகமே.


Barakat Ali
அக் 05, 2025 11:59

ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மக்களின் நாடி பிடிக்காமல் ஐ ஏ எஸ் அதிகாரிகள் எப்படி உணர்கிறார்கள் ????


Venkatesan
அக் 05, 2025 15:22

அரசு எந்திரத்திற்கு தெரியும் எது நடக்கும் எது நடக்காது என்று. மின் கட்டண தாறுமாறு உயர்வு, சொத்து வரி தாறுமாறு உயர்வு, பால் விலை தாறு மாறு உயர்வு. வெள்ள காலங்களில் மட்டமான செயல்பாடு, கள்ள சாராய இறப்புகள், லாக்கப் சாவுகள், சில வாரங்களுக்கு முன் ஒரு சாதாரண ஆளை அடித்து கொன்ற காவல் துறை. ஹிந்து மத துவேஷம். இதெல்லாம் அடிப்படை காரணங்கள். மக்களோடு ஓரளவுக்கு இருப்பவர்கள் அரசு அதிகாரிகள், அவர்களுக்கு தெரியும். தீமுகா கூட்டணி வலிமையானதாக இருக்கலாம் ஆனால் அவர்களால் தும்பமடைந்த பொது மக்கள் ஏராளம் ஏராளம்.


Ramanujam Veraswamy
அக் 05, 2025 11:46

Once known as no no-nonse and up-right official has now become Propaganda Secretary of the ruling party. A sea change. Hats off to the ruling party.


Ramanujam Veraswamy
அக் 05, 2025 11:43

There is dramatic downward quality change in the functions of IAS IPS officers. They joined hands in hand with both ruling and opposition parties and enter into a joint venture of corruption, looting, manipulations of records.etc. This is the reasons they wish to move to centre to avoid problems from the next ruling parties. Officials moving to Centre before six months of elections are Tobe subjected to vigilance enquiry.


Barakat Ali
அக் 05, 2025 11:19

அப்ரூவர்களாக ஆக்கிவிட வேண்டும் ......


Yasar Arafat Yasar Arafat
அக் 05, 2025 09:51

தமிழக ஐஏஎஸ் அனைவரும் மாற்ற பட வேண்டும்.


Anantharaman
அக் 05, 2025 08:32

தேர்தலுக்கு 4/6 மாதங்களுக்கு முன் 356 பிரிவை உபயோகித்து ஆட்சியைக் கலைத்து அதன் பிறகு தேர்தல் நடத்தினால் தில்லு முல்லுகள் ஒழியும்.


K V Ramadoss
அக் 05, 2025 11:44

ஆமோதிக்கிறோம்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை