உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உதவியற்றவர்களாக உணர்கிறோம் : அமித் ஷாவுக்கு கோல்கட்டா பெண் டாக்டரின் தந்தை கடிதம்

உதவியற்றவர்களாக உணர்கிறோம் : அமித் ஷாவுக்கு கோல்கட்டா பெண் டாக்டரின் தந்தை கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: கோல்கட்டாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: உங்களை சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். நீங்கள் கூறும் இடத்தில்,சொல்லும் நேரத்தில் சந்திக்க தயாராக உள்ளேன். எங்கள் மகளுக்கு நடந்த கொடூரமான எதிர்பாராத சம்பவத்திற்கு பிறகு, நாங்கள் பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறோம். தற்போது உதவியின்றி ஆதரவு அற்றவர்களாக உணர்கிறோம்.நானும் எனது மனைவியும் உங்களை சந்தித்து சில விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவும், தற்போது இருக்கும் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்று உங்களின் வழிகாட்டுதலை பெறவும் விரும்புகிறோம். உங்களுடன் பேசுவதற்கான வாய்ப்பை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம். உங்களுடைய அனுபவமும் வழிகாட்டுதலும் எங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று நினைக்கிறோம்.எங்களுக்காக நீங்கள் எப்போது, எங்கே சில நிமிடங்கள் ஒதுக்கலாம் என்பதை தெரியபடுத்தவும். அதன் மூலம் நாங்கள் தயாராகி கொள்கிறோம். இந்த கோரிக்கைக்கான உங்களின் நேரத்தையும் பரிசீலனையையும் நான் பாராட்டுகிறேன். உங்களின் சாதகமாகன பதிலை எதிர்நோக்குகிறேன். உங்களை சந்திப்பதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஆக.,09 ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசுக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றி வரும் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு மேற்கு வங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nandakumar Naidu.
அக் 23, 2024 00:09

பெண் மருத்துவரின் தந்தை சொல்வது சரிதானே, ராட்சசி மம்தா இந்நேரம் ஜெயிலில் இருக்க வேண்டும். தேச, சமூக மற்றும் ஹிந்து விரோத செயல்களுக்காக 50 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்கப்படிருக்கவெண்டும். அவளது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு அதை செய்யவில்லை. மொத்த மேற்கு வங்கத்தை தீவிரவாதிகளின் கூடாரமாக்கி வைத்திருக்கிறாள் அந்த ராட்சஸி, இன்னும் ஏன் பதவியில் இருக்கிறாள்?


Dharmavaan
அக் 23, 2024 07:17

கோர்ட்டும் கண்டுகொளவதில்லை


சாண்டில்யன்
அக் 22, 2024 20:54

உதவியற்றவர்களாக உணர்கிறோம் அங்கே என்ன வாழுதாம் அவரும் அதேபோலத்தான் உணருகிறாராம் கொல்கத்தா டாக்டர்கள் யார் என்ன சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லையே இன்னொரு மணிப்பூர் மாதிரியல்லவா இருக்கிறதுங்கிறார்


N Sasikumar Yadhav
அக் 22, 2024 21:28

ஓட்டுப்பிச்சைக்காக சிறுபான்மையிரனரின் கால்களை பிடிக்கும் கும்பலுங்க ஆட்சியில் இருக்கும்போது எதுவும் செய்ய முடியாது .


Sankar Ramu
அக் 23, 2024 03:06

மணிப்பூரை ஏன் இங்க சம்பந்த படுத்தர? ஓட்டுக்கு காசு வாங்கிம் பிச்சைகள் இருக்கும் வரை அப்படிதான் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை