உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிஜாப் சர்ச்சைக்கு காரணமான பெண் டாக்டர் பணியில் சேர மறுப்பு

ஹிஜாப் சர்ச்சைக்கு காரணமான பெண் டாக்டர் பணியில் சேர மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், சர்ச்சையில் சிக்க காரணமான முஸ்லிம் பெண் டாக்டர், கடும் மன உளைச்சலில் இருப்பதால் அரசு பணியில் சேர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த 15ம் தேதி, 1,283 ஆயுஷ் டாக்டர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் நிதிஷ் குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், 10 டாக்டர்களுக்கு, முதல்வர் நிதிஷ் குமார் நேரடியாக பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது, நுஸ்ரத் பர்வீன் என்ற பெண் டாக்டர், 'ஹிஜாப்' எனப்படும், முகத்தை மூடும் துணியை அணிந்து பணி ஆணை பெற வந்தார். அந்த பெண்ணின் ஹிஜாபை நிதிஷ் குமார் சுட்டிக்காட்டி விலக்கும்படி செய்கை செய்தார். தொடர்ந்து அந்த பெண் டாக்டரின் அனுமதியின்றி, நிதிஷ் குமாரே ஹிஜாபை விலக்கினார். இது சர்ச்சையானது. முதல்வரின் செயலுக்கு, எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நுஸ்ரத் பர்வீன், மாநில அரசின் ஆணைப்படி நாளை பணியில் சேர வேண்டும். ஆனால், ஹிஜாப் விவகாரம் பெரிதானதால் அவர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் உள்ள அரசு பல்கலையில் பேராசிரியையாக நுஸ்ரத் பர்வீன் பணியாற்றும் நிலையில், தனியார் 'டிவி'க்கு அவரது சகோதரர் அளித்த பேட்டியில், 'என் சகோதரி, அரசு பணியில் சேர வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளார். 'எனினும், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவரை சமரசம் செய்து வருகிறோம். மற்றவரின் தவறுக்கு நீ ஏன் பாதிக்கப்பட வேண்டும் என கூறி வருகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

KRISHNAVEL
டிச 20, 2025 16:16

டில்லி குண்டு வெடிப்பிற்கு பிறகு , இவர் போன்ற டாக்டர்கள் மீது பொதுவாகவே அவநம்பிக்கை ஏற்படுகிறது


Jamal Mohamed
டிச 20, 2025 11:09

ஒரு முதலமைச்சருக்கு சுயமரியாதை வேண்டும் ஹிஜாபை பிடித்து இழுப்பது கன்னியகுரைவு


venakat
டிச 19, 2025 19:58

தன் அடையாளத்தை en மறைக்க வேண்டும்.


jayanthi U
டிச 19, 2025 18:33

வெட்ககேடான செயலை செய்தவரின் குடும்பத்தில் பெண்ணின் ஆடையை விலக்கி பார்த்தால் அனுமதிப்பாரா.


V.Mohan
டிச 19, 2025 16:06

எந்த அளவுக்கு அடிப்படைமதவாத பிற்போக்கு எண்ணங்கள் மூளையில் ஏற்றப்பட்டுள்ளன ???ஐயா, இவர்கள் ஏன் மருத்துவம் படிக்க வேண்டும்? அதிலிருந்து கற்றறிந்து கொண்ட எதுவும் மனதில் மாற்றம் தரவில்லையென்றால் இவர்களுக்கு அரசாங்கம் செய்த செலவு வேஸ்ட் மதம் மனித வாழ்வின் மேன்மைக்கு மட்டும் அறிவுரை வழங்க வேண்டுமே ஒழிய, உண்ணுவது உடுத்துவது, அடுத்தவனை எப்படி அழிப்பது என்பது பற்றியெல்லாம் செயல் ஆணைகளை வழங்குவது மதத்தின் வேலை இல்லை. இல்லை. பொதுஜன அக்கறை இல்லாத மதமோ அதன் தலைவர்களோ உலகில் எந்த நல்லதையும் செய்ததாக சரித்திரம் இல்லை


Saleemabdulsathar
டிச 19, 2025 15:22

கேவலமான செயலை செய்த ஒருவர் முதல்வராக இருந்தால் அந்த மாநிலத்தில் பெண்களின பாதுகாப்பு எப்படி இருக்கும்


ஜான்சி
டிச 19, 2025 14:39

ஹிஜாப் அணிந்துதான் எல்லா மருத்துவ பணியையும் செய்வாரா ?


Pascal
டிச 19, 2025 14:23

ஒரு பொது இடத்தில் பெண் அணிந்துள்ள துணியை அவரது அனுமதி இன்றி அகற்ற முயற்சித்த செயல் வெட்க கேடானது. அதுவும் கவுரவமான பதவியில் இருந்து கொண்டு .


Kasim
டிச 19, 2025 11:47

அனைத்து மக்களும் ஒன்றாக வாழ வேண்டும்.இங்கு எல்லா மதத்திலும் பெண்களுக்குறிய போற்றுதல் இருக்கு.


Kasim
டிச 19, 2025 11:41

அவர் ஒரு இந்து பெண் என கண்ணதாசன் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு இங்கு வந்து கமெண்ட் போடுங்கள். அவர் இஸ்லாமிய பெண்..


புதிய வீடியோ