உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியரசு தின அணிவகுப்பில் பெண் போர் விமானி பங்கேற்பு

குடியரசு தின அணிவகுப்பில் பெண் போர் விமானி பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : இந்த ஆண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பில் இடம்பெற உள்ள நம் விமானப்படையின் வாகனத்தில், பெண் போர் விமானி அனன்யா சர்மா இடம் பெறவுள்ளார்.நம் விமானப் படையின் பல்வேறு பிரிவுகளில் பெண்கள் பணியாற்றி வந்தாலும், போர் விமானங்களை இயக்கும் முதல் பெண் விமானி, 2016ல் பணியில் சேர்ந்தார். அந்த வரிசையில், அனன்யா சர்மா என்ற பெண், 2021ல் போர் விமானிக்கான பயிற்சியில் இணைந்தார். மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பட்டம் பெற்றுள்ள இவரது தந்தை சஞ்சய் சர்மா, 1989 முதல் நம் விமானப் படையின் போர் விமானியாக உள்ளார். கடந்த 2022ல், 20 பெண்கள் நம் விமானப் படையில் போர் விமானிகளாக பணியில் சேர்ந்தபோது, அனன்யா சர்மாவுக்கும் விமானியாகும் வாய்ப்பு கிடைத்தது.அன்று முதல், நம் விமானப் படையில் சுகோய் ரக போர் விமானங்களை அவர் இயக்கி வருகிறார். வரும் 26ம் தேதி புதுடில்லியில் நடக்கவுள்ள குடியரசு தின அணிவகுப்பின் போது, நம் விமானப்படை வாகனத்தில் விமானி அனன்யா சர்மா இடம் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

mrsethuraman
ஜன 22, 2024 14:50

பறக்கும் பாவைக்கு பாராட்டுக்கள் .


shakti
ஜன 22, 2024 14:36

சர்மா என்றால் பிராமணர்...


PR Makudeswaran
ஜன 22, 2024 10:31

மஹாகவி அன்றே சொன்னார் புதுமை பெண் என்று


RAMAKRISHNAN NATESAN
ஜன 22, 2024 08:13

இவரது தந்தை சஞ்சய் சர்மா, 1989 முதல் நம் விமானப் படையின் போர் விமானியாக உள்ளார்....


Ramesh Sargam
ஜன 22, 2024 07:06

பெண்களை போற்றுவோம்.


Duruvesan
ஜன 22, 2024 06:47

வாழ்த்துக்கள்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ