உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்ஜினியரிடம் ரூ.14 கோடி மோசடி: மஹா.,வில் பெண் சாமியார் சிக்கினார்

இன்ஜினியரிடம் ரூ.14 கோடி மோசடி: மஹா.,வில் பெண் சாமியார் சிக்கினார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: சாப்ட்வேர் இன்ஜினியரின் இரு மகள்களை பாதித்துள்ள நோயை குணப்படுத்துவதாக கூறி, 14 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் சாமியார் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்தவர் தீபக் தோலாஸ். இவரது இரண்டு மகள்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி. மற்றொருவருக்கு மர்மநோய் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை தன் ஆன்மிக சக்தியால் குணப்படுத்துவதாக கூறி, போலி பெண் சாமியார் ஒருவர் தீபக்கை கடந்த 2018ல் அணுகினார். இதற்காக பல்வேறு தவணைகளில், 14 கோடி ரூபாயை பெற்றுக்கொண்ட அந்த பெண் சாமியார், தீபக்கின் மகள்களின் நோயை குணமாக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தீபக் புனேயில் உள்ள கோத்ரூட் போலீசாரிடம் பெண் சாமியார் மற்றும் மோசடிக்கு உதவிய இருவர் மீது புகார் அளித்தார். இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறியதாவது: மகள்களின் நோயை குணப்படுத்துவதாக கூறி, 14 கோடி ரூபாய் மோசடி செய்தது உண்மை என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் பிரிட்டனில் பணியாற்றியபோது அங்கு வாங்கிய வீடு, புனேயில் உள்ள அவரது நிறுவனம், புனே அருகேயுள்ள கிராமத்தில் உள்ள அவரது விவசாய நிலத்தை விற்று பணம் தந்தால் நோயை குணப்படுத்துவதாக அந்த பெண் சாமியார் கூறியுள்ளார். இதையடுத்து சுதாரித்த தீபக், பெண் சாமியார் மீது பண மோசடி புகார் அளித்ததன்படி, பெண் சாமியார் உட்பட மூவரை பிடித்து விசாரணை நடக்கிறது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ