உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது நமது கடமை: சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது நமது கடமை: சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

புதுடில்லி: '' பயங்கரவாதத்தை அனைத்து வடிவிலும் எதிர்த்து போராடுவது நமது கடமை,'' என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியிடம், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலின் அழைப்பின் பேரில் டில்லி வந்துள்ளார். இன்று( ஆகஸ்ட் 18) அவர், நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது ஜெய்சங்கர் கூறுகையில், நமது கருத்துக்களை பரிமாறி கொள்ள தயாராக இருக்கிறோம். நமது ஆலோசனையானது, இந்தியா சீனா இடையிலான ஒத்துழைப்பையும், முன்னேற்றத்தை கொண்ட உறவையும் உறுதி செய்வதாக அமைய வேண்டும். இரு பெரிய நாடுகள் சந்திக்கும்போது நிச்சயம் சர்வதேச நிலவரம் குறித்து நிச்சயம் விவாதிக்கப்படும். நாங்கள் நேர்மையான , சமமான மற்றும் பல முனை உலக வரிசையை எதிர்பார்க்கிறோம். சர்வதேச அமைப்புகளிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும். தற்போதைய சூழலில், உலக பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், ஸ்திரத்தன்மையை பேணுவதும் தேவைப்படுகிறது. பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் எதிர்த்து போராடுவது நமது கடமையாகும். நமது உறவில் கடினமான காலகட்டத்தை பார்த்துள்ளோம். தற்போது இரு நாடுகளும் அதனை தாண்டி முன்னேறி செல்கின்றன. இதற்கு இரு தரப்பிலும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை தேவை. பரஸ்பர மரியாதை, பரஸ்பர நலனில் கருத்தில் கொள்ள வேண்டும். வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ அல்லது போட்டி மோதலாகவோ மாறக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறுகையில், எல்லைப் பகுதியில் அமைதியை பராமரித்து வருகிறோம். ஆன்மிக யாத்திரைக்கு இந்திய யாத்ரிகர்கள் திபெத்திற்கு வருகின்றனர். நாம் நம்பிக்கையை பகிர்ந்து கொள்வதுடன், ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறோம். நமது வெற்றிக்கு ஒருவருக்கு ஒருவர் பங்களிப்பதுடன், ஆசியா மற்றும் உலகத்தின் ஸ்திரத்தன்மைக்கு பங்காற்றுவோம், என்றார். வாங் யி, நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Priyan Vadanad
ஆக 19, 2025 00:38

ராகுல் ஒரு நேபாளியை சந்தித்து பேசியிருந்தால்கூட நமது வாடகை வாசகர்கள் சீனாக்காரனிடம் பப்பு பேசிவிட்டார் நாட்டை விற்றுவிட்டார் என்று வரிந்து கட்டிக்கொண்டு எழுதி கதறியிருப்பார்கள். இப்போதுதான் இது தக்காளி சட்னி என்று சிந்திப்பார்கள்.


guna
ஆக 19, 2025 08:26

அதுதானே உண்மை ....வடை சுடாதே


guna
ஆக 19, 2025 08:27

ராகுல் பண்ணது திருட்டு சந்திப்பு


Tetra
ஆக 19, 2025 00:36

நடவாத விடயம். பால் விஷத்தோடு சேர முடியாது.


Mohan
ஆக 18, 2025 22:06

நண்பர்கள் விரோதிகள் ஆகும் பட்சத்தில் ஏன் விரோதிகள் நண்பர்களாக கூடாது? இது காலத்தின் கட்டாயம். சீனாவும் இந்தியாவும் கைகோர்த்து அமெரிக்க ஏகோபித்தியத்தை எதிர்ப்பது உலகத்திற்கு நன்மை பயக்கும்.


MARUTHU PANDIAR
ஆக 18, 2025 21:54

பயங்கர வாதத்துக்கு எதிரத்து சீனா போரிட்டனுமாம்...சேவித்தேன் காதுல சங்கு ஊதறதுக்கு தான் சமம். நல்ல தமாசு தான் போங்க. அவன் பேச்செல்லாம் ஒரு பேச்சா ? ஓடும் தண்ணீரில் கூட எழுத லாயக்கு இல்லை. அவன் குணம் அப்படி.


ஆரூர் ரங்
ஆக 18, 2025 20:59

சீன வெடிகுண்டுகளுடன் 2 காஷ்மீர் பயங்கரவாதிகள் இன்று கைது.


Ramesh Sargam
ஆக 18, 2025 20:38

பயங்கரவாதத்தை வளர்த்து ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, சீனா உதவி செய்வதை முதலில் நிறுத்தவேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் கண்டிப்பாக, கறாராக கூறவேண்டும். பிறகுதான் மேலும் பேச்சுவார்த்தை என்று கூறவேண்டும்.


Tamilan
ஆக 18, 2025 20:33

விரோதிகள் நண்பர்களாகிவிட்டார்களா?


அப்பாவி
ஆக 18, 2025 19:52

கல்வான் புல் ஜாவொ..


முக்கிய வீடியோ