உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகரிக்கும் தங்க கடன்கள் பிஸியாகும் நிதி நிறுவனங்கள்

அதிகரிக்கும் தங்க கடன்கள் பிஸியாகும் நிதி நிறுவனங்கள்

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நம் நாட்டில் சிறு கடன் வளர்ச்சியில் தங்க கடன்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக, கிரிப் என்ற நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தங்க கடன் வளர்ச்சி 53 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.மொத்த சிறு கடன் மதிப்பில், தங்க கடன்கள் 27 சதவீத பங்களிப்புடன் உள்ளன. பொதுத் துறை வங்கிகள் அதிகளவு தங்க நகைக் கடன்களை வழங்கியுள்ளன. செப்டம்பர் மாத இறுதிவரை, தங்க நகைக் கடன் வழங்கியது 36 சதவீதம் உயர்ந்து, 14.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சிறு கடன் வளர்ச்சியில், தங்க நகைக் கடன் வழங்குவது அதிகரித்து வருவதால், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் இந்த வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, இந்நிறுவனங்கள், ஓராண்டுக்குள் தங்க நகைக் கடன் வழங்குவதற்காக, பிரத்யேகமாக 3,000 புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rengaraj
நவ 26, 2025 10:37

தங்க நகை சேமிப்பு நாட்டுக்கு நல்லது. ஆனால் அதன் மீதான கடன் வளர்ச்சி ஒரு அளவுக்கு மேல் ஆபத்து. வங்கிகள் இதை புரிந்துகொண்டு கடன்களை வழங்க வேண்டும். தனி நபர்களும் தங்கத்தை வைத்துக்கொண்டு கடன் வழங்குவதை குறைத்து வியாபாரத்தின் மீதான கடனை அதிகப்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.


பாலாஜி
நவ 26, 2025 09:16

நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்படும் தங்க நகைகளில் எவ்வளவு தங்கம் சுரண்டப்படுகிறது எவ்வளவு போலி தங்க நகைகள் ஊழல் நிகழ்கிறது?


sivaram
நவ 26, 2025 08:36

குடிக்க பணம் வேண்டும் என்றால் மனைவியின் நகையை அடகு வைத்தால் நல்ல சரக்கு வாங்கி அடிக்கலாம் அப்படியே ஊர் சுற்றலாம் சினிமா பார்க்கலாம் எதற்கு வேலைக்கு போகணும் சொல்லு


Nagercoil Suresh
நவ 26, 2025 08:05

இதிலிருந்து என்ன தெரியவருகிறது என்றால் ஏறிய தங்கம் விலை ஒருநாளும் பழைய நிலைக்கு குறையப்போவதில்லை என்பது உறுதியாகிறது. அதிலும் பல நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்துள்ளது விலை குறைவை தடுக்கும்...


ஜெய்ஹிந்த்புரம்
நவ 26, 2025 06:45

தங்கக் கடன் “வளர்ச்சி”? ஓ, உங்க பார்வையில் இது வளர்ச்சியா? ஜீக்கு மெடல் குத்தி விடலாமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை