உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அம்பேத்கர் மருத்துவமனையில் விதிமுறை மீறல் விண்ணப்பத்தை நிராகரித்தது தீயணைப்புத் துறை

அம்பேத்கர் மருத்துவமனையில் விதிமுறை மீறல் விண்ணப்பத்தை நிராகரித்தது தீயணைப்புத் துறை

புதுடில்லி:பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காததால், டில்லி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மருத்துவமனை ஆகியவற்றுக்கு, பாதுகாப்பு சான்றிதழ் வழங்க, தீயணைப்புத் துறை மறுத்து விட்டது.ஜெய்சிங் சாலையில், எட்டு ஏக்கர் பரப்பளவில், 17 மாடிகள் கொண்ட கட்டடத்தில் டில்லி போலீஸ் கமிஷனர் அலுவலகம் இயங்குகிறது. கடந்த, 2019ல் திறக்கப்பட்ட இந்தக் கட்டடத்துக்கு, தீயணைப்புத் துறையின் பாதுகாப்புச் சான்றிதழ் கேட்டு ஏப்ரல், 21ம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. மே, 30ம் தேதி போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து தீயணைப்புத் துறை அதிகாரிகள், கட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர். பல இடங்களில் தீத்தடுப்பு விதிமுறை மீறப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், லிப்டுக்குள் அங்கீகரிக்கப்படாத வரவேற்பு மேஜை இருந்தது. இதைத் தொடர்ந்து, டில்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மருத்துவமனையில், மே 24ம் தேதி தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். பல குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. வார்டில் இருந்து வெளியேறும் அவசர வழிகளில் பொருட்கள் சேமிக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டு இருந்தன.அதேபோல, கட்டடத்தின் முக்கிய-ப் பகுதிகளில் தீத்தடுப்பு கருவிகள் பொருத்தவில்லை. மேலும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை முறைப்படி அமைக்கப்படவில்லை. மருத்துவமனையில் 500 படுக்கைகள் இருந்த நிலையிலும், தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைப்படி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கவில்லை. புகை வெளியேற்றும் வழி போதுமானதாக இல்லை. சான்றளிக்கப்பட்ட ஆலோசகரால் கட்டடம் ஆய்வு செய்யப்படவில்லை. இதையடுத்து, அம்பேத்கர் மருத்துவமனையின் விண்ணப்பமும், 11ம் தேதி நிராகரிக்கப்பட்டது.இந்த மருத்துவமனைக்கு, 2022ம் ஆண்டு மார்ச் மாதம், தீயணைப்புத் துறையின் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது, விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால், புதுப்பித்தல் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை