உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்னும் 40 தேஜஸ் போர் விமானங்கள் வரவில்லை: விமானப்படை தளபதி கவலை

இன்னும் 40 தேஜஸ் போர் விமானங்கள் வரவில்லை: விமானப்படை தளபதி கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' 40 தேஜஸ் போர் விமானங்கள் இன்னும் விமானப்படைக்கு வந்து சேரவில்லை,'' என விமானப்படை தளபதி ஏபி சிங் கூறியுள்ளார். இந்த விமானங்கள் கொள்முதல் செய்வதற்கு 2009- 2010 ல் ஒப்பந்தம் போடப்பட்டது.கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தை தயாரித்து வருகிறது. விமானப்படையில் பயன்பாட்டில் இருந்த மிக் 21 போர் விமானங்களுக்கு மாற்றாக இந்த விமானத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.இந்நிலையில் கருத்தரங்கம் ஒன்றில் விமானப்படை தளபதி ஏபி சிங் பேசியதாவது: தேஜஸ் போர் விமானத்தை விமானப்படையில் சேர்ப்பது என 1984 ல் முடிவு செய்யப்பட்டது. 17 ஆண்டுகள் கழித்து, அவை 2001 ல் அந்த விமானங்கள் பறந்தன. பிறகு 2016 ல் அவை விமானப்படையில் இணைக்கப்பட்டன. ஆனால், அதில் இன்னும் 40 விமானங்கள் விமானப்படைக்கு வரவில்லை. இதுதான் நமது உற்பத்தி திறன். நாம் ஏதாவது செய்ய வேண்டும். நமக்கு போட்டி இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பல போட்டியாளர்கள் இருந்தால் தான் பணிகள் நடக்கும். இல்லையென்றால் எதுவும் மாறாது.ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட காலக்கெடுவுக்கும் செய்யாவிட்டால், அது பொருத்தம் இல்லாததுஆகிவிடும். காலம் முக்கியமானது. தோல்வி இருக்கலாம். ஆனால், அதனை கண்டு அஞ்சக்கூடாது. தோல்வியை கண்டு அஞ்சிக் கொண்டு நாம் நேரத்தை வீணடித்துக் கொண்டு இருக்கிறோம். நேரம் மிகவும் முக்கியமான துறைகளில் பாதுகாப்பு துறையும் ஒன்று. நாம் குறிப்பிட்ட காலக்கெடுவை எட்டாவிட்டால், தொழில்நுட்பத்தால் எந்த பயனும் இருக்காது. நமது தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டுமே தவிர அதைக் கண்டு பயப்படக்கூடாது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிதி 5 சதவீதம் மட்டுமே உள்ளது. அதனை பாதுகாப்பு பட்ஜெட்டில் 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.எந்த நாடும் செய்யாத வகையில், சீனா 6வது தலைமுறை போர் விமானத்தை சோதித்த நிலையில், தேஜஸ் போர் விமானங்கள் பற்றாக்குறை குறித்து இந்திய விமானப்படை தளபதி பேசி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Subash BV
ஜன 11, 2025 19:00

DONT EXPECT EFFICIENCY FROM PUBLIC SECTORS. PRIVATISE IT IMMEDIATELY. PUT THE BHARATH FIRST.


c.chandrashekar
ஜன 10, 2025 17:19

தனியார் மயமாக்கங்கள் உங்களுக்கு 40 என்ன 80 விமானம் கிடைக்கும்


Visu
ஜன 09, 2025 23:16

ஒன்னு மார்ட்டின் அ இரு இல்ல மனோஜை இரு அது என்ன. மார்டின் னோஜ் அப்பத்துக்கு மதம்மாறி அரசு சலுகை பெற இரண்டுபேர் வைச்சுருக்க நீயெல்லாம் கருத்துபோடுற தூ


பார்த்தா
ஜன 09, 2025 10:46

பொதுத்துறை நிறுவனங்கள் காலத்திற்கேற்ப திறமையோடு முன்னேற வேண்டும். நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் இடஒதுக்கீடு தேவையில்லை. இஸ்ரோ, எச்.ஏ.எல் மாதிரி பல நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறை நீக்கப்பட வேண்டும். இதை ஜனாதிபதியின் அவசரசட்டம் வாயிலாக உடனடியாக செய்யனும். ஜெனரல் சொன்னபடி டாஸ்க் போர்ஸ் ஏற்படுத்தி முடிக்கனும். ராக்கெட் செய்ய முடிந்த இஸ்ரோ முன் போர்விமானங்கள் செய்வது ஒரு பிரமாதமான காரியம் கிடையாது. மோடிஜி கவனிப்பார் என நம்புகிறேன்.


ஆரூர் ரங்
ஜன 09, 2025 10:19

இப்போ இலகு ரக விமானங்களின் வேலையெல்லாம் ஆளில்லா ட்ரோன்களே செய்து விடுகின்றன. மற்ற தாக்குதல்களுக்கு ஏவுகணை உள்ளது. ராணுவம் தனது தேவைகளை காலத்துக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். HAL லிடம் மூன்றாண்டு உற்பத்தித்திறனுக்கும் மேல்( லாபகரமான) ஆர்டர் புக் உள்ளது. தாமதம் ஏற்படவே செய்யும்.


vbs manian
ஜன 09, 2025 09:12

பொது துறை நிறுவனங்களின் திறமையின்மை வெளிச்சம். வோட்டு வாங்கி அரசியல் செய்யும் அரசியல்வாதி தனியார் துறைக்கு எதிரி. நாடு நலிவடைகிறது.


N.Purushothaman
ஜன 09, 2025 08:40

HAL பற்றி தளபதி கூறினால் திருட்டு திராவிடனுங்க மோதி , கமிஷன்னு உளறானுங்க ... இட ஒதுக்கீட்டால் அரசு நிறுவனங்கள் இப்படித்தான் இருக்கும் ..எங்கும் ஜாதி ..எதிலும் ஜாதி ..ஜாதி துவேஷம் என இருந்தால் எப்படி மாற்றம் வரும் ?


Kasimani Baskaran
ஜன 09, 2025 08:02

கம்முநிச நாட்டில் அரசாங்கம்தான் அனைத்தையும் நடத்தும். அங்கு யாரும் சொத்து சேர்க்க முடியாது. சீனா அந்தக்கோட்பாட்டை விட்டு வெளியே வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று அங்கு ரோல்ஸ்ராய்ஸ் மட்டுமல்லாது புகாத்தி கார்களையும் கூட பார்க்க முடிகிறது. வெள்ளைக்காரர்கள் இந்தியாவை நேருவின் கையில் கொடுத்த பொழுது அதை ஒரு இரண்டும்கெட்டான் தேசமாகவே இருக்க விரும்பினார்கள். கம்முநிச மனப்பான்மைக்கு முடிவு கட்டாமல் இந்தியா ஒரு பொழுதும் முன்னேற முடியாது.


Dharmavaan
ஜன 09, 2025 06:48

என்ன ஆரணம் என்பதை HAL விளக்கம் வேண்டும் மோடி தலையிட வேண்டும்


அப்பாவி
ஜன 08, 2025 22:35

இருக்காதே. ஜீ ஆட்சியில் இது மாதிரி நடக்காதே. ஹெச்.ஏ.எல் லுக்கு பேமெண்ட் பண்ணலேன்னா லேட் ஆவும்.


Ganapathy
ஜன 08, 2025 23:16

ஆயிரம் ரூபா கொடுக்க வக்கில்லை. வேங்கைவயல்லுக்கு போக துப்பில்லை. கள்ளக்குறிஞ்சீக்கு போக தைரியம் இல்லை. வாயப்பாரு திருட்டு திராவிடனுக்கு.


Senthoora
ஜன 09, 2025 05:25

என்ன இப்படி சொல்லுறீங்க. ஜிக்கு போகவேண்டிய கமிஷன் போயிடுச்சு, இனி விமானம் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன, நம்ம சோலி முடிஞ்சிடிச்சு.


Dharmavaan
ஜன 09, 2025 06:50

செண்தூர் அறிவிலி ஜீஸ் அதைக்கொண்டு சொத்து சேர்த்துவிட்டார் கட்டுமர கூட்டம் போல


S.Martin Manoj
ஜன 09, 2025 18:59

ஒருத்தருக்கு மணிப்பூர் போக துப்பில்லை,பெட்ரோல் டீசல் விலை குறைக்க துப்பில்லை,டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை உயர்த்த துப்பில்லை ஆனாலும் நாங்க முரட்டு முட்டு கொடுப்போம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை