மேலும் செய்திகள்
காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது: கார்கே
16 minutes ago
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர்கள் படுகொலை: ஓவைஸி கண்டனம்
4 hour(s) ago | 2
மும்பை: மஹாராஷ்டிராவில் முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு தாக்கல் செய்த வழக்கில், இரண்டாவது கணவர் சாட்சியம் அளித்ததால், 16 ஆண்டுகளாக நீடித்த வழக்கு முடிவுக்கு வந்தது. மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், 2009ல் முன்னாள் கணவருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 2005ல் என் குடும்பத்தினரின் ஏற்பாட்டின்படி திருமணம் நடைபெற்றது. அதன்பின் தான், கணவருக்கு ஏற்கனவே திருமணமானது தெரியவந்தது. இதை தொடர்ந்து, கணவரும், அவரது முதல் மனைவியும் இணைந்து, என்னை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினர். சில ஆண்டுகளில் கணவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டேன். இதனால், என் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஜீவனாம்சம் அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் 3,200 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, அப்பெண் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதை தொடர்ந்து நடந்த விசாரணையில், எதிர்பாராதவிதமாக, அப்பெண்ணின் இரண்டாம் கணவரையே சாட்சியமாக நீதிமன்றத்தில் முதல் கணவர் ஆஜர்படுத்தினார். கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி பி.என்.சிக்னே விசாரணை நடத்தியதில், மனுதாரரான அப்பெண் இரண்டாம் திருமணம் செய்தது உறுதியானது. வழக்கு நிலுவையில் இருந்தபோதே இத்திருமணம் நடந்ததால், முதல் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமை அவருக்கு இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், 16 ஆண்டுகள் நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
16 minutes ago
4 hour(s) ago | 2