உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டில் முதல்முறை: விமானத்தில் வைபை சேவை வழங்குகிறது ஏர் இந்தியா!

நாட்டில் முதல்முறை: விமானத்தில் வைபை சேவை வழங்குகிறது ஏர் இந்தியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உள்நாட்டு விமான பயணத்தின் போது விமானங்களில் வைபை வசதி வழங்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்து உள்ளது. இதன் மூலம், இந்தியாவில் விமான பயணத்தில் வைபை சேவை வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமை ஏர் இந்தியாவிற்கு கிடைத்து உள்ளது.வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் குறிப்பிட்ட ஏர்பஸ் ஏ321நியோ விமானங்களிலும் இந்த சேவை வழங்கப்படும். இவை நியூயார்க், லண்டன் , பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் நகரங்களுக்கு செல்லும் சர்வதேச விமானங்கள் ஆகும். இதற்கு முன்னர், விஸ்தாரா நிறுவனம் சர்வதேச விமானங்களில் வைபை சேவை வழங்கியது. ஆனால், நவ., மாதம் இந்த விமான நிறுவனம், ஏர் இந்தியா உடன் இணைக்கப்பட்டது.இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உள்நாட்டு பயணிகளுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கு வைபை வசதி இலவசமாக வழங்கப்படும். படிப்படியாக மற்ற விமானங்களுக்கும் பயன்படுத்தப்படும்.விமானம் 10 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல செல்லும் போது, பல சாதனங்களில் வைபை சேவையை பயன்படுத்தலாம். விமான பயணத்திலும் சமூக ஊடகங்கள், பணி நிமித்தம், நண்பர்களுக்கு செய்தி அனுப்ப இணைய வசதியை பயன்படுத்த வைபை வசதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் ஏர் இந்தியா கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ganapathy
ஜன 01, 2025 21:10

உங்களைவிட அவங்களுக்கு சமூக சிந்தனை அதிகம். அதானால் குழப்ப வேண்டாம் மக்களை எதையாவது எழுதி. இது எந்தளவுக்கு பயனுள்ளது என்பதை முதல்ல அறிந்து எழுது. அதுவும் 17 மணிநேரம் விமான பயணத்தில். மேலும் இது ஏற்கனவே வளைகுடா நாட்டுகளின் விமானங்களில் இலவசமாக குறுஞ்செய்தியை வாட்சப் செய்ய மட்டும் வழங்கப்படுகிறது. ஏர் ஏசியாவில் உள்ளுர் விமானங்களிலும் இந்த சேவை உள்ளது. இப்படிப்பட்ட அடிப்படையான வசதிகளைக்கூட செய்யாமல் எப்படி மற்ற பன்னாட்டு விமான நிறுவனங்களை வணிகப்போட்டியில் சமாளிக்க முடியும்? மேலும் இதற்கும் விமான பாதுகாப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே தான் இது மற்ற விமான நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.


Ramesh Sargam
ஜன 01, 2025 19:58

விமான சிப்பந்திகள், பைலட் உட்பட வைபை உபயோகிக்க ஆரம்பித்து விட்டால், விமானத்தை யார் செலுத்துவார்கள்?


sundar
ஜன 01, 2025 22:08

ஆட்டோ பைலட் எனப்படும் க்ரூஸ் முறையில் விமானத்தைத் தானாகவே இயங்கும் படி செய்து விடலாம்.


புதிய வீடியோ