உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விண்வெளிக்கு "டூர்" போன முதல் இந்தியர்: யாரு சாமி இவரு?

விண்வெளிக்கு "டூர்" போன முதல் இந்தியர்: யாரு சாமி இவரு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை, ஆந்திராவைச் சேர்ந்த கோபிசந்த் தோட்டகுரா பெற்றுள்ளார். இவர் ப்ளூ ஆர்ஜின் விமானத்தில் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 'நியூ ஷெப்பர்ட்-25 (என்எஸ்-25) என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 6 பேர் கொண்ட ஒரு குழு, சுற்றுலாப் பயணிகளாக விண்வெளிக்கு சென்றனர். இந்த ராக்கெட் மேற்கு டெக்சாஸில் உள்ள ஒரு தனியார் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து கிளம்பியது. இதில் கோபிசந்த் தோட்டகுராவும் விண்வெளிக்கு சுற்றுலா சென்றார். ஏற்கனவே இந்தியர்கள் பலரும் விண்வெளிக்குச் சென்றுள்ள போதிலும், விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பை தோட்டகுரா பெற்றுள்ளார். சிறு வயதில் இருந்து விமானத்தில் பயணம் செய்வதில், கோபிசந்த் தோட்டகுராவுக்கு ஆர்வம் அதிகமாக இருந்து வந்துள்ளது. இவர் எம்ப்ரி- ரிடில் ஏரோநாட்டிக்கல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.ப்ளூ ஆரிஜின் விமானம் 6 பயணிகளை வெற்றிகரமாக விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று திரும்பியுள்ளது. தோட்டகுராவை சமூகவலைதளத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை